For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரியில் அதிமுக அதிரடி... 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

புதுவை: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் இம்முறை அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது அதிமுக. அங்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக.

கடந்த சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ADMK goes to poll alone in Pondy

இதனால் கூட்டணி அமைச்சரவை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காரைக்கால் சுயேட்சை எம்எல்ஏ சிவகுமார் ஆதரவுடன் ரங்கசாமி தனியாக ஆட்சியமைத்தார். இதனால் அதிமுக கடும் கோபமும், ஏமாற்றமும் அடைந்தது. இந்த விவகாரத்தில் ரங்கசாமியை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்.

இந்த சம்பவங்களின் எதிரொலியாக இருகட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தலின்போது ரங்கசாமி ஒரு வேட்பாளரை முன்மொழிந்து, அவரை அதிமுகவில் இணைய வைத்து, அதிமுக ஆதரவுடன் அதிமுக எம்பியாக்கினார். இதனால் அதிமுக- ரங்கசாமி இடையிலான கசப்புணர்வு கொஞ்சம் குறைந்தது.

இந்த சூழ்நிலையில், அடுத்தமாதம் நடைபெற உள்ள புதுவை சட்டசபைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இதனால் அதிமுகவினரும் ஆளுங் கட்சியை விமர்சிக்காமல் இருந்து வந்தனர்.

ஆனால், எதிர்பார்த்தபடி கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு ரங்கசாமியும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன், காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு புதுவை தேர்தல் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி, புதுவையில் அனைத்து (30) தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது.

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் விவரம்:

1. மண்ணாடிப்பட்டு: எம். மகாதேவி (மாநில கழக இணை செயலாளர்).
2. திருபுவனை (தனி): ஜி. சபாபதி (மதகடிப்பட்டு),
3. ஊசுடு (தனி): ஏ.கே-. செல்வராசு (கோரிமேடு),
4. மங்களம்: கே. நடராசன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்),
5. வில்லியனூர்: வி. ராஜாமணி (எ) சுப்ரமணியன் (ஊசுடு தொகுதிச் செயலாளர்)
6. உழவர்கரை: எம். சிவசங்கர் (ரெட்டியார் பாளையம்)
7. கதிர்காமம் : எம்.ஆர். கோவிந்தன் (மேட்டுப்பாளையம்)
8. இந்திரா நகர்: டி.குணசேகரன், (மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்)
9. தட்டாஞ்சாவடி: எஸ்.காசிநாதன் (மாநிலக் கழக இணைச் செயலாளர்)
10. காமராஜ் நகர்: பி. கணேசன் (மாநிலக் கழக துணைச் செயலாளர்)
11. லாஸ்பேட்டை: அன்பானந்தம் (உழவர் கரை கழகச் செயலாளர்)
12. காலாப்பட்டு: கா.லிங்கம் (எ) ஏழுமலை (பாரதி நகர்)
13. முத்தியால்பேட்டை: வையாபுரி மணிகண்டன், (முத்தியால் பேட்டை)
14. ராஜ்பவன்: பி.கண்ணன் (மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
15. உப்பளம்: அன்பழகன் எம்.எல்.ஏ. (கழக முன்னாள் செயலாளர்)
16. உருளையன்பேட்டை: ஏ.ரவீந்திரன் (நகரச் கழகச் செயலாளர்)
17. நெல்லித்தோப்பு : ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ. (மாநில ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர்)
18. முதலியார் பேட்டை: ஏ.பாஸ்கர் எம்.எல்.ஏ. (எம்.ஜி-.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)
19. அரியாங்குப்பம்: டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
20. மணவெளி: பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. (மாநில கழக் செயலாளர்)
21. ஏம்பலம் (தனி): கோ.கோவிந்தராசு (கிருமாம்பாக்கம் பேட்)
22. நெட்டப்பாக்கம் (தனி): எல். பெரியசாமி எம்.எல்.ஏ. (புதுச்சேரி மாநிலக் கழக துணைச் செயலாளர்)
23. பாகூர்: பா.வேல் முருகன் (பாகூர் கொம்யூன்)
24. நெடுங்காடு (தனி): பன்னீர் செல்வம் (நெடுங்காடு)
25. திருநள்ளார்: அசனா (காரைக்கால் மாவட்டக் கழக துணைச் செயலாளர்)
26. காரைக்கால் வடக்கு : எம்.வி.ஓமலிங்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
27. காரைக்கால் தெற்கு: வி.கே. கணபதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
28. நிரவி - திருப்பட்டினம்: வி.எம்.சி. சிவக்குமார் எம்.எல்.ஏ.
29. மாஹே : எஸ்.பாஸ்கர் (மாஹே)
30. ஏனாம் : மஞ்சல சத்திய சாய்குமார் (ஏனாம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்)

English summary
ADMK to contest in all 30 assembly constituencies in Puthucherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X