For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதிராமங்கலம் போலீஸ் தடியடிக்கு கருணாஸ் கண்டனம்! ஜெ. முடிவுக்கு எதிராக நடக்க கூடாது என வலியுறுத்தல்!

கதிராமங்கலம் மக்கள் மீது போலீஸ் கட்டவிழ்த்துவிட்ட தடியடிக்கு அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கதிராமங்கலத்தில் போலீஸ் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதற்கு அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் கொள்கை முடிவுக்கு எதிராக தமிழக அரசு நடக்க கூடாது எனவும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ADMK Mla Karunans condemns Edappadi Govt

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். இதது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. கருணாஸ், போலீஸ் தடியடி நடத்தியது வன்மையாக கண்டனத்துக்குரியது.

கதிராமங்கலத்தில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். ஜெயலலிதாவின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படக் கூடாது. இவ்வாறு கருணாஸ் கூறினார்.

English summary
ADMK MLA Karunas has condemened CM Edappadi Palanisamy govt's action against Kathiramangalam protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X