அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்- ஓபிஎஸ்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் கொள்கைளை அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கட்டிக் காக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

ADMK MLAs Should not vote for Edappadi Palanisamy : OPS

நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குதான் என்ற ஓ.பன்னீர்செல்வம், குடும்ப ஆட்சி இருக்க கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம் என்றும் கூறினார்.

English summary
Former chief minister O.Paneerselvam says that ADMK MLAs Should not vote for Edappadi Palanisamy.
Please Wait while comments are loading...