For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா ஜெயிலுக்கு போய் வந்த பின் நடக்கும் முதல் அதிமுக உட்கட்சி தேர்தல்.. டிசம்பரில்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இத்தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி வரை 14 கட்டங்களாக நடைபெறுகிறது.

18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

ADMK party election to be held from next month

அதனைத் தொடர்ந்து உடனடியாக தனது முதலமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் ஜெயலலிதா. பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த மாதம் ஜாமீனில் வெளி வந்தார். சென்னை திரும்பிய அவர் வீட்டோடு தங்கியுள்ளார். கட்சிப் பணிகளை "மட்டும்" பார்த்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அதிமுக உட்கட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதிமுக கட்சியின் அனைத்து நிலைகளுக்குமான இந்தத் தேர்தல் வரும் டிசம்பர் 11ம் தேதி தொடங்கி, அடுத்தாண்டு ஏப்ரம் 24ம் தேதி வரை 14 கட்டங்களாக நடைபெறுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

கழக அணைப்புத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் கீழ்க்காணும் விவரப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள வேட்பு மனு விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, அதற்கான விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

1. கிளைக் கழக நிர்வாகிகள்:

கிளைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பொறுப்புகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஊராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.250.

2. பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள்: வார்டு கழகச் செயலாளர் பணிக்கு ரூ.300. மற்ற பொறுப்புகளுக்கு ரூ.200.

3. நகர வார்டு கழக் நிர்வாகிகள்:

வார்டு கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.500. மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.300.

4. மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள்:

வட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.2,000 மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.700.

5. பேரூராட்சிக் கழக நிர்வாகிகள்:

பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.3,000. மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.1,000.

6. நகரக் கழகச் செயலாளர்:

நகரக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.5,000 மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.2000.

7. பகுதிக் கழக நிர்வாகிகள்:

பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.5,000 மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.2,500.

8. ஒன்றியக் கழக நிர்வாகிகள்:

ஒன்றியக் கழககச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.5,000 மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.2,500.

9. மாவட்டக் கழகச் செயலாளர்:

மாவட்டக் கழக செயலாளர் பொறுப்புக்கு ரூ.25,000 மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.5,000.

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுதில்லி மற்றும் அந்தமான் மாநிலங்கள்:

1. கிளை, வார்டு வட்டக் கழக நிர்வாகிகள்

செயலாளர் பொறுக்கு ரூ.100. மற்ற பொறுப்புகளுக்கு கட்டணம் இல்லை.

2. நகரம், பகுதி, தொகுதிக் கழக நிர்வாகிகள்

செயலாளர் பொறுப்புக்கு ரூ.250. மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.150.

3. மாவட்டக் கழக நிர்வாகிகள்

மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.1000 மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.500.

4. மாநிலக் கழக நிர்வாகிகள்

மாநிலக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.10,000 மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் ரூ.2,000.

மேற்கண்ட அறிவிப்பிற்கு இணங்க, சட்ட திட்ட விதிமுறைகளின்படி கழக அணைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதா சிறையில் இருந்து திரும்பியதும் நடைபெறும் முதல் உள்கட்சித் தேர்தல் என்பதால், இது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

English summary
The ADMK general secretary Jayalalitha has announced the party election will be held from December 11 to next year April 24 in 14 phases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X