For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசி அணிக்கே இரட்டை இலை கிடைக்கும் வாய்ப்பாம் - 'பொர்க்கி' புகழ் சு.சுவாமி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக, சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி என இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில், சசிகலா அணிக்கே இரட்டை இலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை இலை சசிகலா அணிக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாகஜவின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Admk Saikala team will get the symbol irattai ilai told Subramaniyan swamy

சசிகலா அணியினருக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 4 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி மகிழ்ச்சி தருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. இன்னும் ஆறு மாத காலத்துக்குள் ராமர் கோயில் கட்டப்படும்.

பாஜக அதற்கான நடவடிக்களை மேற்கொற்கொண்டு வருகிறது. அதேவேளையில் அங்கு பாபர் மசூதி கட்டப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திரும்பத் திரும்ப தமிழர்களை 'பொர்க்கீஸ்' என்று குறிப்பிட்டு வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் , ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ படுகொலை குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழர்களை 'பொர்க்கீஸ்' என குறிப்பிட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தபோதும் அதையெல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அவ்வாறே குறிப்பிட்டு வருகிறார் சு.சுவாமி.

English summary
Admk sasikala team will get the symbol irattai ilai and Ramar temple will be constructed soon in uttarpradesh, said 'Porkis' fame Bjp leader Subramaniyan swamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X