For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரணம் முதல் மீண்டும் இணைந்த ஆகஸ்ட் வரை... அதிமுகவில் அரங்கேறிய பரபரப்புகள்!

ஜெயலலிதா மரணம் முதல் அதிமுக பிளவுபட்டு ஒன்று சேர்வது வரையிலான ஒரு பிளாஷ்பேக்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ஜெயலலிதா மரணம் முதல் அதிமுக உடைந்து தற்போது இணைந்துள்ளது வரை நடந்த விஷயங்கள் ஒரு ரீகேப்.

 ADMK splits from Jayalalitha death to till date.

டிசம்பர் 5,2016 : அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததையடுத்து நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

டிசம்பர் 29 : அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

பிப்ரவரி 5 : தனிப்பட்ட காரணங்களுக்காக ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சசிகலா சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த நாளே பதவியேற்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா ஏற்கப்பட்டாலும், புதிய முதல்வர் பதவியேற்கும் வரை பதவியில் நீடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிப்ரவரி 6 : ஆளுநர் தமிழகம் வராததால் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்கும் முடிவு தள்ளிப் போடப்பட்டது.

பிப்ரவரி 7 : ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்துவிட்டு, கடைசியில் நிர்ப்பந்தம் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறினார்.

பிப்ரவரி 9 : அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனனும் அதிமுகவில் இருந்து விலகி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்ததால் அவருக்கு கூடுதல் பலம் சேர்ந்தது.

பிப்ரவரி 10 : சசிகலா தரப்பு 129 எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரெசார்ட்டில் தங்க வைத்தனர், எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவாமல் இருக்க இந்த கடத்தல் நாடகம் நடந்தது.

பிப்ரவரி 14 : சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

பிப்ரவரி 15 : அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் நியமிக்கப்பட்டார், சசிகலா பெங்களூரு சிறையில் சரணடைந்ததையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பிப்ரவரி 18 : முதல்வர் பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார். எதிர்க்கட்சிகள் வெளியேற ஓ.பிஎஸ் அணியினர் வாக்களிக்காமல்,சசிகலா அணியின் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்ச் 8 : ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஆணையம், சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் பிரம்மாணட உண்ணாவிரதம் நடத்தினார்.

மார்ச் 9 : மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மார்ச் 15 : அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிப்பு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு

மார்ச் 18 : அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயருக்காக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு மார்ச் 23 : கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயரையும், கட்சிக்கான சின்னத்தையும் தேர்ந்தெடுத்தன.

ஏப்ரல் 7 : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக விநியோகிப்பட்ட பணம் குறித்த ஆவணங்கள் வெளியாகின

ஏப்ரல் 10 : வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

ஏப்ரல் 17 : இரட்டை இலைக்கு லஞ்சம் பெற முயன்றதாக டிடிவி. தினகரனை டெல்லி காவல்துறை விசாரணைக்கு அழைத்தது.

ஏப்ரல் 18 : கட்சி நலனுக்காக இரு அணிகள் இணைப்புக்காக அமைச்சர்கள் சிலர் கேட்டுக் கொண்டதால் கட்சியை விட்டு விலகுவதாக தினகரன் அறிவித்தார்.

ஏப்ரல் 24 : அதிமுகவின் இரண்டு அணிகள் இணைய இரண்டு அணிகள் சார்பிலும் தலா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஏப்ரல் 26 : சின்னத்திற்காக லஞ்சம் தர முயன்ற முகாந்திரம் இருந்ததாக டிடிவி. தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மே 1 : அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் வெளிப்படையாக எந்த அதிகாரப்பூர்வ சந்திப்புகளும் நடக்கவில்லை.

மே 5 : ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் இருந்து தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் தர்மயுத்தத்தை தொடங்கினார்.

மே 17 : அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் பழனிசாமி. கட்சியும் ஆட்சியும் பழனிசாமி கையில் வந்தது அது முதல் எடப்பாடி பழனிசாமி அணியாக செயல்படத் தொடங்கியது.

ஜீன் 1: திஹார் சிறையில் இருந்து டிடிவி. தினகரன் வெளியில் வந்தார், கட்சியில் தான் தொடர்ந்து செயலாற்றப் போவதாக அறிவிப்பு ஜீன் 5: எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 32 எம்எல்ஏக்களின் ஆதரவு தினகரனுக்கு கிடைத்தது. ஜீன் 12: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

ஜீன் 29 : அதிமுகவின் எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி இணைய தினகரன் 60 நாட்கள் கெடு விதித்தார். ஜூலை மாதம் முழவதும் இரு அணிகள் இணைவதற்கான பரபரப்பு கிளம்பினாலும் அமைச்சர்களின் விமர்சனங்கள், ஓ.பிஎஸ் அணியினரின் சவடால் பேச்சுகளால் அணிகள் இணையவில்லை ஆகஸ்ட் 6 : கெடு முடிந்ததையடுத்து தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உள்பட சிலருக்கு கட்சியில் புதிய நிர்வாகப் பொறுப்பை வழங்கினார். ஆகஸ்ட் 10 : தினகரன் நியமனம் செல்லாது என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு, தினகரன் உத்தரவுக்கு கட்சியினர் கட்டுப்பட வேண்டாம் என்றும் தீர்மானம்.

ஆகஸ்ட் 11 :டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு. அதிமுக அணிகள் இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்.

ஆகஸ்ட் 14 : ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்து விட்டு வந்து மக்களுக்கு நல்லது நடக்கும் முடிவை எடுப்பேன் என்று அறிவிப்பு.

ஆகஸ்ட் 14 : மதுரை மேலூரில் தினகரன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடு, யாருக்கும் பயப்படாமல் கட்சியில் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவிப்பு

ஆகஸ்ட் 17 : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம், வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 18 : முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்களது அணியினருடன் ஆலோசனை நடத்தி ஜெ. சமாதியில் இணைவதாக பரபரப்பு.

ஆகஸ்ட் 19 : நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை, இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது, ஓன்றிரண்டு நாட்களில் இணைப்பு என அறிவிப்பு

ஆகஸ்ட் 21 : அணிகள் இணையும் என்று காலை முதல் பரபரப்பு, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் நிர்வாகிகளுடன் ஆலோசனை. 5 மாதங்களுக்குப் பின் தலைமை அலுவலகம் வந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பழனிசாமி கைகுலுக்கி வரவேற்பு. அணிகள் இணைவதாக அறிவிப்பு

English summary
Splitted ADMK after Jayalalitha death now showing signs of merger the political twists which took place within7 months at Tamilnadu politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X