For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமது எம்ஜிஆர், ஜெயா டிவி இணையதளங்களையும் முடக்கி அதிரவைத்த லிஜியன் ஹேக்கர்ஸ்

அதிமுக நாளிதழான நமது எம்ஜிஆர், அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஜெயா டிவி ஆகியவற்றின் இணைதளங்களும் கடந்த ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஜெயா டிவி ஆகியவற்றின் இணைதளங்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதைத்தொடர்ந்த கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் முடக்கப்பட்டு ஏறத்தாழ 2 மாதங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி லிஜியன் என்ற ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அந்தப்பக்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஹேக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கட்சி சார்பு இணையதளங்கள் முடக்கப்படுவது இது முதன் முறையல்ல. இதற்கு முன்பு அதிமுகவின் அதிகாரபூர்வ இணையதளம், ஜெயா டிவியின் இணையதளம், அதிமுகவின் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளன.

ஜெயா டிவி இணையதளம் முடக்கம்

ஜெயா டிவி இணையதளம் முடக்கம்

கடந்த 2013ஆம் ஆண்டு கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், அதிமுக ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டிவி இணையதளத்தையும் ஹாக்கர்கள் முடக்கியிருந்தனர்.

கருத்துக்கணிப்பால் வந்த வினை

கருத்துக்கணிப்பால் வந்த வினை

இதேபோல் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக நாளிதழான நமது எம்ஜிஆர் இணையதள பக்கத்தில் '2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்' என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கருத்து தெரிவித்தவர்கள் அதிமுக கூட்டணிக்கு 13 சதவீத இடமும், திமுக கூட்டணிக்கு 85 சதவீத இடமும் கிடைக்கும் என்று கூறியிருந்தனர்.

நீண்ட நாட்களாக முடக்கம்

நீண்ட நாட்களாக முடக்கம்

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த இணையதளத்தை ஹேக்கர்கள் சிலர் முடக்கி தங்களுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டுள்ளதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

2 மாதங்களுக்கும் மேலாக முடக்கம்

2 மாதங்களுக்கும் மேலாக முடக்கம்

இதையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இணையதளம் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அந்த இணையதளம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக அந்த இணையதள பக்கத்திலேயே கூறப்பட்டிருந்தது. ஏறத்தாழ 2 மாதங்களுக்கும் மேலாக நமது எம்ஜிஆர் இணையதளம் புதுப்பிக்கப்படாமல் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
ADMK support Namadhu mgr, ADMK official website and and ADMK support TV channel were hacked in 2013 and 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X