மர்ம நபர்களால் வக்கீல் வெட்டிக்கொலை.. சிவகங்கை அருகே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே பையூரில் பில்லப்பன் என்ற வழக்கறிஞர் மர்ம நபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

சிவகங்கை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பில்லப்பன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பையூர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பில்லப்பனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

 Advocate murdered by gang

ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே சாய்ந்த அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர் பிலலப்பனை கொன்ற கொலையாளிகள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
advocate murdered in Sivagangai
Please Wait while comments are loading...