For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அரசு செயல்பாட்டுக்கு 59% ஆதரவு – முதலிடத்தில் இலவச மிக்சி கிரைண்டர் திட்டம் - 89%

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா தலைமையிலான அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? என்ற கேள்விக்கு 59 சதவிகிதம் பேர் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களில் விலையில்லா மிக்சி கிரைண்டர் திட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

2016 சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக லயோலா கல்லூரி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு இன்று வெளியிடப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

2016ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக்கணிப்பில், தமிழக முதல்வராகும் தகுதி, திறமை, வாய்ப்பு ஆகியன முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கே உள்ளது என்று தெரியவந்துள்ளது.

ஜெயலலிதாவின் செயல்பாடுகள்

ஜெயலலிதாவின் செயல்பாடுகள்

2011ம் ஆண்டு மே மாதம் முதல் முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடுகள் எப்படி என்று கேட்டதற்கு 59 சதவிகிதம் பேர் நன்றாக உள்ளதாக கூறியுள்ளனர்.

மக்கள் நலத்திட்டங்கள்

மக்கள் நலத்திட்டங்கள்

அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களில் விலையில்லா மிக்சி கிரைண்டர் திட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. திருமண உதவித்திட்டம் இரண்டாம் இடமும் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் திட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. முதியோர் உதவித்தொகை 4ம் இடத்தையும், அம்மா உணவகம் 5ம் இடத்தையும் பிடித்துள்ளது.

எத்தனை பேர் ஆதரவு?

எத்தனை பேர் ஆதரவு?

இலவச மிக்ஸி, கிரைண்டருக்கு 89 சதவிகிதமும், திருமண உதவித் தொகைக்கு 73.6 சதவிகிதமும், மாணவர்களுக்கான மடிக்கணிக்கு 72.8 சதவிகிதமும், முதியோர் உதவித்தொகைக்கு 69.7 சதவிகித பேர் அம்மா உணவகத்திற்கு 52.2 சதவிகிதம் பேரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கிரானைட் - மணல் கொள்ளை

கிரானைட் - மணல் கொள்ளை

மணல் கொள்ளையை தடுப்பதில் அரசின் செயல்பாடு மோசம் என 63.9 சதவிகித பேரும், கிரானைட் முறைகேடுகளை தடுக்க தவறியதில் மோசம் என 56.6 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மின் தடையை நீக்கும் அதிமுக அரசின் நடவடிக்கைக்கு 63.9 சதவிகித பேர் நன்று என்று கூறியுள்ளனர்.

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு

ஜெயலலிதாவின் தற்போதைய அணுகுமுறையே தேர்தல் நடைபெறும் வரை தொடர்ந்தால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு அதிமுக பெருவாரியான இடங்களை பிடிக்கும் என 24.7 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

அதிமுக – திமுக போட்டி

அதிமுக – திமுக போட்டி

அதிமுகவிற்கும் திமுகவிற்கும் கடுமையான போட்டி நிலவும் என் 26.2 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். திமுக அதிக இடங்களை பிடிக்கும் என்று 22.6 சதவிகிதம் மக்கள் கூறியுள்ளனர்.

English summary
A pre-poll survey done by the students and professors of the Loyola College in Chennai said 59 percent of the respondents said rulling AIADMK government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X