For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியை தக்க வைக்க அதிமுக ஐ.டி அணியில் ஸ்மார்ட் வியூகம்... வாக்காளர்களுக்கு தனி கவனிப்பு?!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்ப என்ன செய்யலாம்னு எதிர்கட்சிக்காரங்க ரூம் போட்டு யோசிக்கிறப்ப... ஆட்சியை தக்க வைச்சுக்க ஆள் ஆளுக்கு ஐடியா கொடுக்குறாங்களாம். அதுவும் அதிமுக கட்சியோட ஐ.டி பிரிவுதான் இதுல முன்னணியில இருக்காம். ஓட்டுச்சாவடிகளை கலர் கலரா பிரிச்ச கையோடு வாக்காளர்களையும் செமத்தியா கவனிக்கப் போறாங்களாம்.

1996, 2006, தேர்தல் மாதிரி இந்த தேர்தல்ல தோத்து போயிரக்கூடாதுன்னு... 234 தொகுதியிலும் வெற்றிக்காக கடுமையா உழைக்கணும்னு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்ட தொண்டர்கள் வீதி வீதியா கூட்டம் போட்டு சாதனைகளை சொல்றதோட, வாக்காளர் பட்டியல்லதான் அதிகமாக கவனம் செலுத்துறாங்களாம்.

மொத்த ஒட்டுச்சாவடிகளையும் தங்களோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து அதை 4 வகையா தரம் பிரிச்சு ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தனி ஆளைப் போட்டு கவனிக்கப் போறாங்களாம். மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற, 2.14 கோடி வாக்காளர்களின் ஓட்டுக்களை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணி அணியா கூட்டம்

அணி அணியா கூட்டம்

எதிர்கட்சியினர் கூட்டணி எப்படி சேருவது என்று ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க. இதுதான் நல்ல சமயம்னு அ.தி.மு.க., அசுர வேகத்தில, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுருக்கு. கட்சியில் இருக்கிற ஒவ்வொரு அணியும் தனித்தனியா ஆலோசனைக் கூட்டம் போட்டு தேர்தலில் எதிர்கட்சிகளோட பிரசாரத்திற்கு, எப்படி பதில் சொல்றதுன்னு ஐடியா பண்ணியிருக்காங்களாம்.

கிணத்தக் காணோம் பாணியில்

5 ஆண்டுகால ஆட்சியில செய்த சாதனைகளை மக்கள் கிட்ட கொண்டு போக நகைச்சுவை நடிகர்களை வைத்து குறும்படங்களை இயக்கியிருக்காங்க. அதை யுடுயூப்லயும் போட்டு பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.

ஓட்டுச்சாவடிகளுக்கு கலர்

ஓட்டுச்சாவடிகளுக்கு கலர்

தமிழ்நாட்ல இருக்கிற மொத்த ஓட்டுச்சாவடிகளையும் 4 கலருக்குள்ள கொண்டு வந்திருக்காங்கலாம் ஐ.டி அணி. கடந்த சட்டசபைத் தேர்தல்ல பெற்ற ஓட்டுகள் அடிப்படையில், சிகப்பு, ஊதா, பச்சை, ஆரஞ்சு கலர்னு பிரிச்சிருக்காங்களாம்.

61 சதவிகிதம் அதிக செல்வாக்கு

61 சதவிகிதம் அதிக செல்வாக்கு

சிவப்பு நிறம் அ.தி.மு.க.,விற்கு செல்வாக்கு மிகவும் குறைவு; ஊதா நிற ஓட்டுச் சாவடிகளில், செல்வாக்கு குறைவு; ஆரஞ்சு செல்வாக்கு; பச்சை நிறம் அதிக செல்வாக்கு உள்ளதை குறிக்கும்.தற்போதைய நிலவரப்படி, 61 சதவீதம் ஓட்டுச் சாவடிகளில், கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

யாருக்கு எத்தனை ஓட்டு

யாருக்கு எத்தனை ஓட்டு

நலத்திட்ட உதவி பெற்ற குடும்பங்கள் விவரம் தனியே தயாரிக்கப்பட்டுள்ளது. பத்து ஓட்டு; ஏழு ஓட்டு; ஐந்து ஓட்டுக்கு மேல் உள்ள குடும்பங்கள் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டுள்ளதாம். அதனடிப்படையில் அதிமுகவிற்கு செல்வாக்கு குறைவாக உள்ள ஓட்டுச்சாவடிகளில், அதிக கவனம் செலுத்தப் போறாங்களாம்.

ஓவர்... ஓவர்.. ஓவர்...

ஓவர்... ஓவர்.. ஓவர்...

இவங்க பண்ணியிருக்கிற ஐடியாவைப் பார்த்தால் வடிவேலு பாணியில் ஆளுக்கு ஒரு வாக்கி டாக்கி கொடுத்து... ஓவர் ஓவர்... சொல்லுவதோடு 10 ஓட்டு இருக்கிற குடும்பத்தை தனியா கண்காணிக்கவும் தனி படையே இயங்கும் போல பெரிய குடும்பத்துக்காரங்க காட்ல கரன்சி மழைக்கு பஞ்சமிருக்காது போலயே. ஏற்கனவே வெள்ள நிவாரணத்திற்கு வாங்கிய பேங்க் அக்கவுண்ட் நம்பர் வேற கைவசம் இருக்கிறதுனால கவலையே இல்லாம இனி தேர்தல் வேலை பார்க்கலாம்னு தெம்பா இருக்காங்களாம் ஆளுங்கட்சியினர்.

English summary
All India Anna Dravida Munnetra Kazhagam IT wing party members are smart plan for 2016 assembly elecion. The AIADMK is still better placed to win the 2016 assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X