பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வருமாம்.. சிரிக்காமல் பேசும் பொள்ளாச்சி ஜெயராமன்

இந்த இயக்கம் எந்த சோதனையை சந்தித்தாலும், பீனிக்ஸ் பறவையாக ஆயிரம் மடங்கு பலத்தோடு மீண்டும் எழும் என்பது கடந்த கால வரலாறு என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீனிக்ஸ் பறவை போல அதிமுக இச்சிக்கல்களில் இருந்து மீளும் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டி: அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம், தமிழக மக்கள் நலன் கருதியும், திமுகவை எதிர்த்தும் 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது.

AIADMK will bounce back like fenix bird: Pollachi Jayaraman

மக்கள் நலனுக்காக பாடுபடும் மக்கள் இக்கம் இது. இந்த இயக்கம் எந்த சோதனையை சந்தித்தாலும், பீனிக்ஸ் பறவையாக ஆயிரம் மடங்கு பலத்தோடு மீண்டும் எழும் என்பது கடந்த கால வரலாறு. இப்போதும் அதிமுக சோதனையில் சிக்கியுள்ளது. இதிலும் மீண்டு வருவோம்.

எம்ஜியார் 20 லட்சம் தொண்டர்களோடு இயக்கத்தை விட்டுச் சென்றார். ஜெயலலிதா 1.50 கோடி தொண்டர்களை விட்டுச் சென்றுள்ளார். சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதா தன்னால், இயலாத சூழலிலும் உடலை வருத்தி மீண்டும் பிடித்த இந்த ஆட்சியை திமுகவிடம் பறிகொடுக்க விடமாட்டோம். எம்ஜிஆரின் நூற்றாண்டு காலம் நடைபெறும் இக்காலகட்டத்தில், சிறப்பாக ஆட்சியை தொடரும்.

இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை நினைவில் நிறுத்தி இந்த ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
AIADMK will bounce back like fenix bird, says Dy speaker Pollachi Jayaraman.
Please Wait while comments are loading...