கருணாநிதி உடல்நலக்குறைவு... மருத்துவமனைக்கு விரைந்த அழகிரி...

உடல்நலக்குறைவால் ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் அழகிரி இன்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கி இருப்பார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நலம் விசாரித்த பின்னர் அழகிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

Alagiri visits Kavery hospital meets Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மு.க. அழகிரி அடிக்கடி வந்து கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து சென்றார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் கருணாநிதியின் மகன் என்ற முறையில் அவர் தனது தாயார் தயாளு அம்மாளை காண அடிக்கடி கோபாலபுரம் வந்து செல்கிறார்.

கருணாநிதி ஒரு மாத காலமாக ஒவ்வாமை பிரச்சினையில் அவதிப்பட்டு வந்தார். தொடர்ச்சியாக படுக்கையில் படுத்தபடியே சிகிச்சை மேற்கொண்டதால் முதுகுப் பகுதியில் புண் ஏற்படவே, இரவு நேரத்தில் அவரால் உறங்க முடியவில்லை.

நேற்று மாலை இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார் கருணாநிதி, அவரைப் பார்ப்பதற்காக கோபாலபுரத்துக்கு வந்தார் மு.க.அழகிரி. அப்போது அங்கு ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் அழகிரியும், ஸ்டாலினும் தனித்தனியாக கிளம்பி சென்றனர்.

அடுத்த மாதம், சென்னை, அறிவாலயத்தில் கூடும், தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், திமுகவில் வில் உயர்மட்ட பொறுப்புகள், விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், கட்சியின் செயல் தலைவராக, ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதைப் பற்றி வெளியான தகவல் அழகிரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

விமான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, நான் அரசியலில் இல்லை என்றும் தலைவர் நன்றாக இருக்கிறார் என்றும் கூறிவிட்டு சென்றார் அழகிரி. இந்த நிலையில் கருணாநிதிக்கு உடல் நிலை பாதிப்பு அதிகரிக்கவே, இன்று அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துர்கா ஸ்டாலின் ஆகியோரும் உடன் வந்தனர். இந்த நிலையில் கருணாநிதியைக் காண இன்று காலையில் மு.க.அழகிரி வந்து நலம் விசாரித்து சென்றார். ஆனால் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அழகிரி எதுவும் தெரிவிக்கவில்லை.

English summary
Former Union Minister and expelled DMK leader M.K. Alagiri met party president M. Karunanidhi, who is admitted in Kavery hospital at Alwarpet in Chennai residence on Thursday morning.
Please Wait while comments are loading...