For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை- செங்கல்பட்டு, திருவள்ளூர் புறநகர் ரயில்கள் நாள் முழுவதும் ஒட்டுமொத்தமாக ரத்து!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் சென்னை நகரில் இருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 40 மணிநேரத்துக்கும் கொட்டிய கனமழை சற்றே ஓய்ந்து சாரல்மழை பெய்து வருகிறது. இந்த இடைவிடாத பேய்மழையால் ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல அடி உயரத்துக்கு தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன.

All EMU trains cancel from Chennai

இதனால் நேற்று மாலை முதலே புறநகர் மின்சார ரயில்கள் பெருமளவு ரத்து செய்யப்பட்டன. தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் முழுமையாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு ரயில்கள் இன்று பகல் 12 மணிவரையும் சென்னை மூர்மார்க்கெட்- திருவள்ளூர் புறநகர் ரயில்கள் பகல் 10 மணிவரையும் சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் புறநகர்கள் ரயில்கள் காலை 10 மணிவரையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாலை 4 மணிவரை என நாள் முழுவதும் ஒட்டுமொத்தமாக புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இருப்பினும் இந்த ரயில் சேவை தடை மேலும் பல மணிநேரத்துக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
All EMU trains in cancelled due to water logging of tracks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X