முதல்வர் குணமடைய கட்சி பேதமின்றி பிரார்த்தனை செய்யும் தலைவர்கள்

சென்னை: உடல் நலக்குறைவால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் வீடு திரும்ப பிரார்தனை செய்வதாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன் ராதா கூறுகையில்,' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரன குனமடைய பிரார்தனை செய்கிறேன்.,' என்றார்.

All party leaders pray for Jayalalitha

பா.ஜ., கட்சியின் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில். ' தமிழக முதலவர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப இறைவனிடம் பிரார்தனை செய்கிறேன்,' என்றார்.

ச.ம.க., கட்சித்தலைவர் சரத்குமார் கூறுகையில்,' முதலவர் ஜெயலலிதா முழுவதும் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப பிரார்தனை செய்கிறேன், என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நடிகர் விஷால் உள்ளிட்டோர் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தங்கள் டிவிட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவில்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. அண்ணாசாலையில் உள்ள மசூதியில் அமைச்சர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் முதல்வருக்காக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

English summary
Various party leaders have prayed for the speedy recovery of CM Jayalalitha from her illness.
Please Wait while comments are loading...

Videos