For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அம்மா"வை மீண்டும் கொடுத்த கர்நாடகத்துக்கு.. ஒன்ஸ்மோர் நன்றி சொன்ன அதிமுகவினர்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: எங்கள் அம்மா வந்தாச்சு. இன்றும், நாளையும் எங்களுக்கு திருவிழா தான் என அதிமுகவினர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவர் சுமார் 7 மாதங்கள் கழித்து இன்று முதன்முறையாக தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

ராஜ்பவன் சென்ற அவர் ஆளுநர் ரோசையாவை சந்தித்து பேசினார். நாளை அவர், 28 அமைச்சர்களுடன் பதவியேற்க உள்ளார். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் பக்கம் எல்லாம் அதிமுகவினராக உள்ளனர். மேலும் ஜெயலலிதாவை வாழ்த்தி நகர் முழுவதும் பேனர்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுகையில்,

எங்கள் அம்மா வந்தாச்சு. இன்றும், நாளையும் எங்களுக்கு திருவிழா தான். நாளை அவர் முதல்வராகிவிடுவார். தமிழகத்தில் பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. அவர் அவற்றை எல்லாம் முடித்து வைப்பார். எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நாள் இது தான் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டரில் மக்கள் ஜெயலலிதா பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். #ammareturns, #jayareturns ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

ஜெயலலிதா பற்றிய சில ட்வீட்கள் இதோ,

கொண்டாட்டம்

அம்மா வருவதால் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. @votefor2leaf #Jayalalithaa தமிழ்நாட்டின் அன்னையே வருக வருக என பேர்ல் பெல் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

7 மாதங்கள் !!!! பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது #AmmaReturns என பிரசாந்த் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

நன்றி

காவிரியை வைத்து கொண்டு அம்மாவை கொடுத்த "கர்நாடக அரசுக்கு'' மீண்டும் நன்றி #அம்மாநாமம்வாழ்க #JayaReturns என விக்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்.

தனது வாழ்வில் இரண்டாவது முறையாக ஓபிஎஸ் தனது தலைவர் முதல்வராக வழிவிட்டுள்ளார்! அம்மாவுக்கு உண்மையான வீரர்! மரியாதை!! #JayaReturns என இன்கேஷியஸ் கிங்ஸ்லி கூறியுள்ளார்.

English summary
ADMK men are on cloud nine as their Amma is going to take oath as CM on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X