For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோக்கியா நிறுவனத்தில் ‘அம்மா செல்போன்’ தயாரிக்கலாம்: அரசுக்கு எம்.எல்.ஏ ஆலோசனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மூடப்பட உள்ள ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா செல்போன் நிறுவனத்தில் `அம்மா மொபைல்' தயாரிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ அ.சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

நோக்கியா நிறுவனம் செல்போன் உற்பத்தியை வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து கடும் பாதிப்புக்கு ஆளாக உள்ளனர். எனவே நிறுவனத்தின் உற்பத்தியை தொடர வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசிய, சி.ஐ.டி.யூ வின் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான அ.சௌந்திரராஜன் கூறுகையில், அம்மா குடிநீர், அம்மா உப்பு உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதைப் போல 'அம்மா மொபைல் போன்'களையும் அறிமுகப்படுத்தலாம் .அதற்கு மூடப்பட உள்ள நோக்கியா நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்.

அரசின் சார்பில் லேப் டாப்புகள் இலவசமாக வழங்கும் போது செல்போன்களை வழங்கிடமுடியும். ஒரு செல்போன் விலை 700 ரூபாய்க்கு விற்பனை செய்ய இயலும் அதனால் தொழிலாளர்களின் பாதிப்பு தடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

English summary
MLA Soudrarajan wants ‘Amma’ mobile made in Sri Perumbuthur Nokia plant
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X