ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடம் சாக்கு பை நிறைய 10 ரூபாய் நாணயங்கள்... கொடுத்து யார்? எதற்காக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த வந்த சுயேச்சை வேட்பாளர் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டெபாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக அளித்து தேர்தல் நடத்தும் அதிகாரியை திக்குமுக்காட செய்துவிட்டார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் 12- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பலமுனை போட்டி நிலவுகிறது. மக்கள் செல்வாக்கை பெறும் தேர்தலாக கருதப்படுகிறது.

அதிமுக பிளவுபட்ட பிறகு எந்த அணிக்கு செல்வாக்கு உள்ளது என்பதையும், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதையும் தெளிவுப்படுத்தும் தேர்தலாக இது உள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்

ஜெயலலிதா மரணத்தில் மர்மத்தில் மரணம் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். அதிலும் தங்களின் 2 முறை எம்எல்ஏ-வும், மாநில முதல்வருமான ஜெயலலிதாவின் மர்ம மரணத்தால் ஆர்.கே.நகர் தொகுதியே கொந்தளிப்பில் உள்ளது.

யாருக்கு ஆதரவு

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓபிஎஸ் அணி, திமுக என கூறினாலும், அந்த மரணம் இயற்கையானதே என்று சசிகலா தரப்பு தெரிவிக்கிறது. இதனால் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது இந்த தேர்தலின் மூலம் தெரியவரும்.

வேட்புமனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து முதன்முறையாக தேமுதிக வேட்பாளர் மா.செ. மதிவாணன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் சில சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நீதி கேட்ட சுயேச்சை

இந்நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் கணேஷ் (52), ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் நீதி கேட்பதை குறிக்கும் வகையில் தராசுடன் வந்தார்.

திக்கு முக்காடிய அதிகாரி

தேர்தலில் போட்டியிட ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகையை தேர்தல் 10 ரூபாய் நாணயங்களாக அளித்ததால் அதை எண்ணுவதற்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவி திக்குமுக்காடினார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த...

ரூ.10 நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவி வரும் நிலையில் அது செல்லும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெபாசிட் தொகையை ரூ.10 நாணயங்களாக கொண்டு வந்ததாக வேட்பாளர் கணேஷ் தெரிவித்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
An Independent candidate Ganesh has given deposit amount Rs. 10,000 as 10 Rs coins in RK Nagar.
Please Wait while comments are loading...