குருநாத சுவாமி ஆடித்தேர் திருவிழாவில் சுங்கக் கட்டணம் கிடையாது- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் குருநாத சுவாமி திருக்கோயில் அடித்தேர் திருவிழாவுக்கு வரும் கால்நடை வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது என எம்.எல்.ஏ ராஜகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், பெருந்தேர் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்தத் திருவிழாவின் போது தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மாடுகள், குதிரைகள் இங்கு நடைபெறும் சந்தைக்குக் கொண்டுவரப்படும்.

அப்போது புதுப்பாளையம் ஊராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு, கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் ஊராட்சிக்குக் கிடைக்கும்.

ஆனால், இந்தாண்டு கடும் வறட்சி நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி அவர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அந்தியூர் எம்.எல்.ஏ ராஜகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கு மாவட்ட நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது என்று எம்.எல்.ஏ ராஜகிருஷ்ணன் கூறினார்.

CM V. Narayana Swamy Opens Railway Bridge in Puducherry-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Anthiyur MLA Raja krishnan declared that toll won't be collected during Gurunatha swamy temple festival from general public and farmers who bring their cattle for market as drought prevails in whole Tamilnadu.
Please Wait while comments are loading...