For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சி தேர்தலை 23ம் தேதிக்குப் பதில் 17 அல்லது 18ல் நடத்த சிபிஎம் கோரிக்கை

By Super
Google Oneindia Tamil News

சென்னை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வாக்குப்பதிவை 17 அல்லது 18-ந்தேதி நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அரவக்குறிச்சியில் ஆளும் அதிமுக, திமுக வேட்பாளர்களின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் இடங்களில் இருந்து தேர்தல் அதிகாரிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அரவக்குறிச்சியில் நாளை நடைபெறவிருந்த வாக்குப்பதிவு, வரும் மே 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Aravakkurichi poll should be held on17th or 18th of May- G.Ramakrishnan

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் அவரக்குறிச்சி தேர்தலை ஒத்திவைத்தது வரவேற்கத்தக்கது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 233 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு 19-ந்தேதி முடிவு வெளி வந்து விடும். தேர்தல் முடிவு வெளிவுந்த பின்னர் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தலை நடத்துவது, அந்த தொகுதியின் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே 17 அல்லது 18-ந்தேதிகளில் தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

English summary
Aravakkurichi poll should be 17th or 18th of May- G.Ramakrishnan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X