For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு- ஜெயேந்திரர் விடுதலைக்கு எதிராக அரசு அப்பீல் செய்ய முடிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உட்பட 9 பேரையும் விடுதலை செய்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு பரிந்து செய்துள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Auditor attack case: TN govt appeal againt Jayendrar

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் 2002-ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். இது குறித்து ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்து வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட கதிரவன், அப்பு ஆகியோர் இறந்துவிட்டனர். எனவே, மற்ற 9 பேர் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து, இன்று இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

சுந்தரேச அய்யர், ரகு, சுந்நதர், ஆனந்த், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அப்பு விசாரணை காலத்தில் உயிரிழந்து விட்டார். மேலும் கதிரவன் என்பவர் சென்னையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 14 வடருடங்களுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்ரூவர் ஆக மாறிய ரவிசுப்பிரமணியன் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு பரிந்து செய்துள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

English summary
Kanchi Sankaracharya Jayendra Saraswathi, and eight others were on Friday acquitted in 2002 auditor Radhakrishnan assault case by a Chennai court. SPP has told govt appeal in high court chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X