அங்கிட்டு செயல்தலைவராகும் ஸ்டாலின்... இங்கிட்டு மீண்டும் தென்மண்டல அமைப்புச் செயலராக அழகிரி?

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வந்த முக அழகிரி தற்போது ஸ்டாலினுடனும் ஆலோசனை நடத்தியிருப்பதில் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த சுமூகமான நிலையில் முக அழகிரி மீண்டும் திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சி தொண்டர்களிடையே உருவாகி உள்ளது.

தமக்கு பின்னால் திமுகவின் தலைவர் ஸ்டாலின்தான் என ஏற்கனவே பிரகடனம் செய்துவிட்டார் கருணாநிதி. தற்போது திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அழகிரியின் சந்திப்புகள்

ஸ்டாலின் செயல் தலைவராகவும் பொதுச்செயலராக துரைமுருகனும் நியமிக்கப்படலாம் எனவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடாலடி அரசியல்வாதி என பெயர் எடுத்து திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக அழகிரியும் கருணாநிதியை அண்மைக்காலமாக தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

ஒதுங்கும் மனமாற்றம்

மேலும் செய்தியாளர்கள் அரசியல் ரீதியாக கேள்விகளை எழுப்பினால், நானே அரசியலில் இல்லை என பவ்யமாக ஒதுங்கிப் போய்விடுகிறார் அழகிரி. அவரது இந்த மாற்றம் திமுகவினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஸ்டாலினுடன் சந்திப்பு

அத்துடன் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று ஸ்டாலினையும் அழகிரி சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். இதனால் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் போதே, அழகிரி மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது.

மீண்டும் பதவி?

அப்படி அழகிரி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டால் அவர் மீண்டும் தென்மண்டல அமைப்புச் செயலராக நியமிக்கப்படவும் சாத்தியங்கள் உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தென்மாவட்டங்களில் உள்ள அழகிரியின் ஆதரவாளர்கள் 'அடுத்த ரவுண்டு' ஆட்டத்துக்கு இப்போதே ஆயத்தமாகிவருகிறார்கள்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Sources said that the MK Azhagiri will comeback into DMK and he will appoint as the South zonal secretary post.
Please Wait while comments are loading...