For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுங்கள் அம்மா...உங்க பாதம் தொட்டு கேட்டுக்குறேன்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் ட்விட்டரில் #BanTasmac (டாஸ்மாக்கிற்கு தடை விதியுங்கள்) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் தெருவுக்கு தெரு இருக்கும் டாஸ்மாக் கடைகளை ஜெயலலிதா மூட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் #BanTasmac என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

மது

மது உங்களை மட்டுமல்ல உங்களை நம்பியிருப்பவர்களையும் வீதிக்குக் கொண்டு வந்துவிடும் #BanTasmac என கிரீன் சைல்ட் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அம்மா

சாராயக் கடைகளை இழுத்து மூடுங்கள் அம்மா ..உங்க பாதம் தொட்டு கேட்டுக்குறேன் #BanTasmac என சிவா ட்வீட் செய்துள்ளார்.

விபத்து

ஒட்டு மொத்த இந்தியாவில் தமிழகத்தில் தான் சாலை விபத்துக்கள் அதிகம். சந்திக்கு சந்தி மதுக்கடைகள் இருந்தால் இது தான் நடக்கும். #BanTasmac என நீலன் தனது கருத்தை கூறியுள்ளார்.

முதல்வர்

சாராய கடை நடத்துகின்ற முதல்வருன்னு... இனி அம்மாவை யாரும் சொல்ல மாட்டார்கள் #BanTasmac என்று கல்பனா தெரிவித்துள்ளார்.

அப்பா

அப்பா இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை குறைய வேண்டுமெனில் #BanTasmac என நவ்சாத் இம்மானுவேல் ட்வீட் செய்துள்ளார்.

கள்

இளமையில் கல் என்பது இளமையிலேயே கள் என்று மாறிவிட்டது #BanTasmac என்று சாதாரணன் என்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
#BanTasmac is trending in twitter hours after ADMK chief Jayalalithaa took oath as TN CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X