பிக்பாஸ்: கமலிடம் சண்டையிட்டாரா காயத்ரியின் தாய்? நல்லவர் போல் காட்டப்படுவதன் பரபர பின்னணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி தவறாக காட்டப்படுவதாக அவரது தாயார் கிரிஜா நடிகர் கமல்ஹாசனிடம் சண்டையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதனை காணும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஜூலியும், கயாத்ரியும் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்துள்ளனர்.

மேடை நாகரிகம் இன்றியும் கேமராக்கள் படம் பிடிக்கின்றன என்ற நினைவும் இல்லாமல் ஜூலியும் காயத்ரியும் ஓவியாவை டார்ச்சர் செய்தது வெட்ட வெளிச்சமாகியது. சேரி பிஹவியர் என்றதோடு மட்டுமின்றி, எச்ச, கன்றாவி, மூஞ்சியும் மொகரக்கட்டையும் என்பது உள்ளிட்ட பல்வேறு கெட்டை வார்த்தைகளை பயன்படுத்தி பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறார் காயத்ரி.

 கொஞ்சம் நஞ்சமல்ல

கொஞ்சம் நஞ்சமல்ல

தானாக பேச முன்வரும் ஓவியாவையும், ஜூலியின் பேச்சைக் கேட்டு காயத்ரி காயப்படுத்தி வருகிறார். ஜூலிக்கு ஆதரவாக காயத்ரி ஓவியாவை படுத்தும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

 சாக்லேட் மில்க் ஷேக்

சாக்லேட் மில்க் ஷேக்

இதனால் மக்கள் காயத்ரி மீது கொலை வெறியில் உள்ளனர். இந்நிலையில் போதாகுறைக்கு அவர் பொய் சொல்கிறார் என்பதை சாக்லேட் மில்க் ஷேக் பிரச்சனையை வைத்து தோலுரித்துக் காட்டினார் கமல்.

 கமலுடன் சண்டை போட்ட கிரிஜா

கமலுடன் சண்டை போட்ட கிரிஜா

இந்நிலையில் காயத்ரி மீது வெறுப்பு வரும் வகையிலேயே அவர் காட்டப்படுவதாக அவரது தாயார் கிரிஜா கமலுடன் சண்டையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களை நம்பித்தானே காயத்ரியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தேன் என்று கூறிய கிரிஜா காயத்ரியின் டேமெஜ் ஆன பெயரை மீண்டும் நல்லப் பெயராக மாற்ற வேண்டும் என்ற ரீதியில் சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 நல்லவராக காட்டப்படும் காயத்ரி

நல்லவராக காட்டப்படும் காயத்ரி

இதன் காரணத்தினாலேயே பிக்பாஸ் மூலம் காயத்ரியை நல்லவராக காட்ட முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காட்டப்படும் புரமோவில் கூட காயத்ரி ஓவியாவிடம் எதை நம்புவது என்பது போலவும் கேள்வி கேட்கிறார்.

 ஆறுதல் கூறும் காயத்ரி

ஆறுதல் கூறும் காயத்ரி

அதற்கு பதில் கூறி அழும் ஓவியாவையும் அவர் ஆறுதல் கூறி தேற்றுகிறார். கெட்டுப்போன காயத்ரியின் பெயரை காப்பாற்றிக்கொடுக்கவே அவரை நல்லவர் போல் காட்டுவதாக கூறப்படுகிறது.

Bigg Boss Tamil, Award function at Big Boss house-Filmibeat Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Biggboss program starts to show Gayathri as good. After the complaint of her mother to Actor Kamahaasan. Gayathri mother Girija fought with Kamal for showed her chocolate powder issue.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்