For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் களம் காணும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள்....கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

By Mathi
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக வேட்பாளர்களாக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட கேபி முனுசாமி, சிட்டிங் எம்.,எல்.ஏ. மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் விவரம்:

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் கோவிந்தராஜ் (வயது 56) அறிவிக்கப்பட்டுள்ளார். 1977-ம் ஆண்டு பெரியமுத்தூர் அதிமுக கிளை செயலராக பொறுப்பேற்றார். இதன் பின் அதிமுகவில் பல பொறுப்புகள் வகித்த கோவிந்தராஜ் 2001-2006 தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார். 2014-ம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலராக இருந்து வருகிறார்.

வேப்பனஹள்ளி - ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத்

வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.வி.எம். மது என்கிற ஹேம்நாத்தின் வயது 41. சொந்த ஊர் சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் ஆகும். அவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு சுகானி என்ற மகள் உள்ளார். எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.
மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.வி.எம். மது என்கிற ஹேம்நாத் கடந்த 2006ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கடந்த 2006, 2011-ம் ஆண்டு என்று 2 முறை சூளகிரி ஒன்றிய குழு தலைவராக பதவியில் இருந்துள்ளார். கட்சியில் சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வருகிறார். இதைத் தவிர கடந்த 2001-ம் ஆண்டில் சூளகிரி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் ஹேம்நாத் இருந்துள்ளார்.

சி.வி. ராஜேந்திரன்

பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளரான சி.வீ.ராஜேந்திரன் சிவி ராஜேந்திரன் (வயது 61) சிந்தம்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அதிமுகவில் 1980-ம் ஆண்டு முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். 2010-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட செயலராகவும் இருந்தார்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம்மனோரஞ்சிதம் நாகராஜ் (வயது 41) மீண்டும் போட்டியிடுகிறார். 1998-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பொறுப்பு வகித்து வருகிறார். அதிமுகவில் 100க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மனோரஞ்சிதம் மீண்டும் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.

ஓசூர்

ஓசூர் அதிமுக வேட்பாளராக பி.பாலகிருஷ்ணா ரெட்டி பாலகிருஷ்ணரெட்டி(வயது 47) நிறுத்தப்பட்டுள்ளார். 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் ஓசூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் ஓசூர் ஒன்றிய செயலராகவும் இருந்து வருகிறார்.

தளி

தளி தொகுதி அதிமுக வேட்பாளராக சி.நாகேஷ்நாகேஷ் (வயது 52) போட்டியிடுகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பேரூராட்சித் தலைவராக இருந்து வருகிறார்.

English summary
Here the Bio data of Krishnagiri Dist. ADMK candidates for assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X