For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியே வந்தாலும் பாஜகவால் வெல்ல முடியாது... 'ஒன்இந்தியா' வாசகர்கள் கருத்து!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைக்கு இடைத் தேர்தல் வந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினி பாஜகவில் சேர்ந்தாலும் கூட பாஜகவால் வெல்ல முடியாது என்று ஒன்இந்தியா தமிழ் இணையதள வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், தமிழக சட்டசபைக்குத் திடீர் தேர்தல் வந்தால் அதிமுகவே மீண்டும் வெல்லும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெற்றி என்பது அமையும் கூட்டணியைப் பொறுத்தது என்ற கருத்து 3வதாக வந்துள்ளது.

திடீர் தேர்தல் வந்தால் யார் வெல்வார்கள்?

திடீர் தேர்தல் வந்தால் யார் வெல்வார்கள்?

தமிழக சட்டசபைக்குத் திடீர் தேர்தல் வந்தால் யார் வெல்வார்கள் என்ற கருத்துக் கணிப்புக் கேள்வியை வாசகர்களிடம் வைத்தது ஒன்இந்தியா தமிழ் இணையம். இதற்கு மொத்தம் 23,543 வாக்குகள் பதிவாகின.

அதிமுகவே வெல்லும்

அதிமுகவே வெல்லும்

அதிமுகவே வெல்லும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 43.1 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாக கருத்துரைத்துள்ளனர். இந்த எண்ணிக்கை 10,146 வாக்குகள் ஆகும்.

திமுக

திமுக

திமுகவுக்கு ஆதரவாக 3271 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 13.89 சதவீதம் பேர் திமுக வெல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி வந்தால் பாஜக வெல்லலாம்

ரஜினி வந்தால் பாஜக வெல்லலாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்தால் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கலாம் என்று 12.09 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 2846 வாக்குகள் கிடைத்துள்ளன.

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று மிகவும் சொற்பமானோரே நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது 6.53 சதவீதம் பேர் இப்படிக் கணித்துள்ளனர். மொத்த வாக்குகள் 1537 ஆகும்.

அமையும் கூட்டணிகளைப் பொறுத்தது

அமையும் கூட்டணிகளைப் பொறுத்தது

வெற்றி என்பது அமையும் கூட்டணிகளைப் பொறுத்தது என்று 14.75 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதாவது இந்தக் கருத்துக்கு 3473 வாக்குகள் கிடைத்துள்ளன.

சத்தியமா 'கெஸ்' பண்ணவே முடியலைங்க

சத்தியமா 'கெஸ்' பண்ணவே முடியலைங்க

வெற்றி யாருக்கு என்பதை ஊகிக்க முடியவில்லை என்று 9.64 சதவீதம் பேர், அதாவது 2270 வாக்குகள் கிடைத்துள்ளன.

English summary
BJP cannot win in a flash poll was to be held for TN assembly, even if Rajini supports the party, say Oneindia readers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X