For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வளர்கிறதா பாஜக? 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நல கூட்டணியை ஒப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.

 BJP done reasonably well in the Tamilnadu assembly election

கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார். இதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.

அதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் 67195. ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.

குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது.

பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 37086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார்.

வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது.

English summary
BJP done reasonably well in the Tamilnadu assembly election, especially in the Kanyakumari district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X