For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் புறவாசல் வழியாக நுழையத் துடிக்கும் பாஜக... நக்மா எக்ஸ்குளூசிவ் வீடியோ பேட்டி

தமிழகத்தில் எப்படியாவது நுழைய வேண்டும் என்பதற்காக புறவாசல் வழியாக பாஜக உள்ளே வர முயற்சிக்கிறது.... நிச்சயம் அது நடக்காது என காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலர் நக்மா சாடியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் புறவாசல் வழியாக வந்து காலூன்ற நினைக்கிறது பாஜக. ஆனால் அது ஒருபோதும் நடக்காது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலர் நக்மா சாடியுள்ளார்.

ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த நக்மா அளித்த சிறப்பு பேட்டி:

பாஜக தமிழகத்தில் எப்படியவது காலூன்ற நினைக்கிறது. அதற்காக புறவாசல் வழியாக நுழைய முற்சிக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அதற்காகத்தான் தமிழகத்தில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

 புறவாசல் பாஜக

புறவாசல் பாஜக

அருணாச்சல பிரதேசம், கோவா,உத்ரகண்ட் மாநிலங்களில் இப்படித்தான் புறவாசல் வழியாக நுழைந்து ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் அரசியல் சூழல் மோசமாக உள்ளதை பயன்படுத்தப் பார்க்கிறது பாஜக.

 டாஸ்மாக்

டாஸ்மாக்

தமிழ்நாட்டில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆனால் அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் தான் ஆர்வமாக உள்ளது.

 திசை திருப்ப முயற்சி

திசை திருப்ப முயற்சி

முழு அடைப்பு அன்று டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, பிரச்சனையை திசை திருப்பப் பார்த்தது தமிழக அரசு. அன்று, இணையதளங்களில் டாஸ்மாக் கடையில் விற்பனை நடந்ததை வைரல் வீடியோக்கள் சுட்டிக்காட்டின.

 கரண்ட் கட்

கரண்ட் கட்

தமிழக அரசு மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்த்திட முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, 'கரண்ட் கட்' பிரச்சனை முக்கியமான பிரச்சனையாக உள்ளது. அதை தீர்க்க தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்''

இவ்வாறு நக்மா கூறினார்.

English summary
Bjp is trying to come through the back gate of tamilnadu. But it never happen told congress spokesperson Nagma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X