For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுடனான கூட்டணி கதவு அடைபட்டது.. இனிமேல் அதிமுக கையில் பாஜக குடுமி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துக்கொள்ள உடன்பட்டுள்ளன. இதன்மூலம், பாஜகவிற்கு திமுக வாயில் அடைக்கப்பட்டுள்ளது.

காங்கிரசின் குலாம் நபி ஆசாத் இன்று, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியபோது, தமிழக சட்டசபை தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்துக்கொள்ள சம்மதம் கிடைத்தது.

இந்த கூட்டணியில் இன்னும் தொகுதி உடன்பாடு எதுவும் செய்துகொள்ளப்படவில்லை. இருப்பினும் கூட்டணி உறுதியாகிவிட்டது.

கதவு அடைபட்டது

கதவு அடைபட்டது

இருப்பினும், பாஜகவை பொறுத்தளவில் அக்கட்சிக்கு இருந்த ஒரு கூட்டணி கதவு அடைக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இதுபோன்ற ஆசையை கூறியிருந்தார்.

சு.சுவாமி திடீர் கருத்து

சு.சுவாமி திடீர் கருத்து

பாஜக மற்றும் திமுக நடுவே கொள்கை ரீதியாக முரண்பாடுகள் உள்ளன. மேலும், திமுக முக்கிய புள்ளிகள் சிலர் மீது 2ஜி ஊழல் வழக்கு நிலுவையிலுள்ளது. இதனால் பாஜக அக்கட்சியோடு கூட்டணி வைக்காது என்று பெருவாரியான மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி மட்டும் மாற்றுக்கருத்தை கூறினார்.

திமுக கருத்து கூறவில்லை

திமுக கருத்து கூறவில்லை

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கினால், பாஜகவும் திமுகவும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று கிண்டிவிட்டார் சு.சுவாமி. இதற்கு திமுக தரப்பில் இருந்து பெரிய எதிர்ப்பு கிளம்பவில்லை. எனவே இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

அதிமுகவுக்கு மிரட்டல்

அதிமுகவுக்கு மிரட்டல்

ஆனால், அதிமுகவை மிரட்டி அதிக சீட் வாங்குவதற்காக சு.சுவாமி இதுபோல தந்திரம் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர். இந்த மிரட்டல் போக்கை நீடிக்க விடாமல் திமுக திடீரென காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பாஜகவுக்கு செக் வைத்துள்ளது.

பாஜகவுக்கு இரு வழிகள்

பாஜகவுக்கு இரு வழிகள்

இப்போது பாஜகவுக்கு இரு வழிகள்தான் உள்ளன. ஒன்று, விஜயகாந்த்தை அழைத்துக்கொண்டு தனி ஆவர்த்தனம் பிடிப்பது, மற்றொன்று அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து அந்த கட்சி கொடுக்கும், சொற்ப தொகுதிகளை வைத்து சந்தோஷப்படுவது.

கூட்டணி சிக்கல்

கூட்டணி சிக்கல்

இதில் விஜயகாந்த்துடன் செல்லும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் பாஜக ஆசைப்பட்டாலும், விஜயகாந்த் அதற்கு ஒப்புக்கொள்வது கடினம். பாமகவும் பாஜக கூட்டணியில் இணைந்தால் மட்டுமே அக்கூட்டணி பலமாக மாறும். ஆனால் பாமகவிலும், தேமுதிகவிலும் முதல்வர் வேட்பாளர்கள் இருப்பதால் அவ்விரு கட்சிகளும் பாஜகவோடு இணைவது சாத்தியமில்லை.

குடுமி அதிமுகவிடம்

குடுமி அதிமுகவிடம்

இப்போது பாஜக குடுமி, அதிமுகவிடம் சிக்கியுள்ளது என்று கூறலாம். ராஜ்யசபாவில் அதிமுக தயவு பாஜகவுக்கு தேவைப்படுவதாலும், திமுக தனது கூட்டணி வாய்ப்பை அடைத்துவிட்டதாலும், பாஜக தற்போது அதிமுக இழுத்த இழுப்புக்கெல்லாம் போயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

English summary
BJP's alliance chance with DMK shut down as the party already made a alliance with Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X