For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டை பாஜக எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது!

By Shankar
Google Oneindia Tamil News

- அமித் மாள்வியா (கட்டுரையாளர் பாஜகவின் ஐடி பிரிவு தேசிய தலைவர்)

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது.

இதோ சில உண்மைகள்:

2006-ல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை முதலில் ஜல்லிக்கட்டைத் தடை செய்து உத்தரவிட்டது. தமிழ் நீதிபதியான ஆர் பானுமதிதான் இந்தத் தடையை விதித்தார். ரேக்ளா ரேசுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட அந்த வழக்கில், ரேக்ளா ரேஸ், எருது விடும் திருவிழா, ஜல்லிக்கட்டு என அனைத்து வகை விளையாட்டுக்களையுமே தடை செய்து தீர்ப்பு வழங்கிவிட்டார் அந்த நீதிபதி.

 BJP says it has supported Jallikattu always

2009-ல் தமிழக அரசு 'தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்தல் சட்டத்தை' இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்தது. இந்த சட்டப்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜனவரி, மே மாதங்களில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம்.

2010-ல் ஆண்டு தோறும் ஜனவரி 15-ம் முதல் அடுத்த 5 மாதங்களுக்குள் ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும், இந்த வாரியத்தின் பிரதிநிதிகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்வையிடுவார்கள் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால் கடந்த 11 ஜூலை, 2011-ல் அன்றைய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட வழி வகுத்தார்.

அன்று ஆட்சியிலிருந்தது திமுகவும், அவர்களின் கூட்டாளியான காங்கிரஸும்தான். அன்று எங்கே போனார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், மற்ற தமிழ் அமைப்புகளும்?

தொடர்ந்து 2014, மே 7-ம் தேதி (அப்போதும் காங்கிரஸ்தான் பதவியில் இருந்தது), உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு திருத்த சட்டத்தை ரத்து செய்து, ஜல்லிக்கட்டை தடை செய்தது. மேலும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றால் PCAA எனும் விலங்குகள் வதைக்கு எதிரான சட்டத்தைத் திருத்தி, காளைகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

இவை எல்லாம் நடந்தது திமுகவும் அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, ஜனவரி 2016-ல் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் 2011- அறிவிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி ஜல்லிக்கட்டு மற்றும் மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் நடக்கும் எருதுப் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கலெக்டரின் அனுமதியோடு, 15 மீட்டர் சுற்றுவட்டத்தில் காளைகளைத் தழுவலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஜூலை 2016-ம் தேதி விலங்குகள் நல வாரியமும், பீட்டாவும் பிரதமர் மோடி அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் ஜல்லிக்கட்டுக்குத் தடைப் பெற்றனர்.

ஜல்லிக்கட்டுக்குத் தடைப் பெற்றுள்ள விலங்குகள் நல வாரியத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் அபிஷேக் மனு சிங்வி. சோனியா காந்தியின் விசுவாசி இவர். ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர்.

இதுமட்டுமல்ல, 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டைத் தடை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தது நினைவிருக்கலாம்.

ஆனால் பாஜக மட்டும்தான் தமிழ் மக்களின் உரிமையான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடைசி வரை நிற்கிறது.

இப்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த வகைசெய்துள்ளது. அதற்கும் மோடி அரசு உறுதுணையாக இருந்துள்ளது. ஜல்லிக்கட்டு நிரந்தரமாக தமிழகத்தில் நடக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

பாரம்பர்ய மரபுகளைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி இது. வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியை வைத்து, நமது பாரம்பர்ய கொண்டாட்டங்கள், நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் விஷம கும்பலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒரு தேசமாக நின்று வென்று காட்ட வேண்டிய தருணம் இது.

English summary
The Bharatiya Janta Party [BJP] has always supported Jallikattu and has stood by the people of Tamilnadu. Here are some facts according to the BJP IT wing's national secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X