For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே அதிமுகவினர் பணபட்டுவாடாவை தொடங்கிவிட்டனர்: பாஜக

By Karthikeyan
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே அதிமுகவினர பணப்பட்டுவாடவை தொடங்கிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு மக்கள் விரும்பும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

BJP slams on admk

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வந்துவுடனேயே அதிமுகவினர் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பண பட்டுவாடா மற்றும் பிரியாணி அளிப்பதை தொடங்கிவிட்டனர். இதை மாநில தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட வேண்டும்.

மேலும் தமிழகத்தில் தொடர்ந்து இந்து தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனை கண்டிக்கும் வகையில் வரும் 28-ம் தேதி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. கோவையில் இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் படுகொலைக்கு பிறகு நடந்த சம்பவத்தில் அப்பாவி இந்துக்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதோடு சசிகுமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

English summary
bjp youth wing leader vinoj slams on admk party for money issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X