புதுவையில் நாராயணசாமி ஆட்சியை கவிழ்க்க பாஜக பக்கா ப்ளான்..விரைவில் க்ளைமாக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து பினாமி ஆட்சியை கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

30 எம்.எல்.ஏக்களைக் கொண்ட புதுவை சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 15. திமுகவுக்கு 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போது பாஜகவுக்கு முட்டுக் கொடுத்து வரும் என்.ஆர். காங்கிரஸுக்கு 8, அதிமுகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

16 எம்.எல்.ஏக்கள்

16 எம்.எல்.ஏக்கள்

புதுவையில் ஆட்சி அமைப்பதற்கு 16 எம்.எல்.ஏக்கள் தேவை. தற்போது பாஜக ஆதரவு கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அதிமுவுக்கு மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

அமித்ஷா ஆலோசனை

அமித்ஷா ஆலோசனை

இன்னமும் 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தால் நாராயணசாமி ஆட்சி அம்போவாகிடும். அண்மையில் புதுவை வருகை தந்த பாஜக தலைவர் அமித்ஷா, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமியுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

நமச்சிவாயத்துக்கு குறி

நமச்சிவாயத்துக்கு குறி

அப்போது, முதல்வர் நாராயணசாமி மீது எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை வளைத்தால் புதிய ஆட்சியை அமைத்துவிடலாம் என விவாதிக்கப்பட்டுள்ளது. புதுவை காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் நமச்சிவாயம், ரெங்கசாமியின் அக்கா மகன்.

பினாமி ஆட்சி

பினாமி ஆட்சி

அவர் நாராயணசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். ஆகையால் நமச்சிவாயம் தலைமையில் குறைந்தது 4 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது. இவர்களை வைத்துக் கொண்டு நாராயணசாமி அரசை கவிழ்த்து பினாமி ஆட்சி 'மலர' செய்யலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம் என கூறப்படுகிறது.

Presidential Election 2017,Puducherry CM Narayanasamy Voting-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Sources said that BJP will topple the Narayanasamy lead Puducherry Govt.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்