கல்வியை காவி மயமாக்க பாஜக முயற்சிக்கிறது... திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு

கல்வியை காவி மயமாக்க பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜெஎன்யுவில் ஆய்வு படிப்பு படித்து வந்த சேலத்தை சேர்ந்த தலீத் மாணவர் முத்துக்கிருஷ்ணன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக மாணவர் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ரூ.கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

டெல்லியில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். உயிரிழந்த முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

அவமானம் தொடர்கிறது

மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் தமிழ அரசு உடனே தலையிட வேண்டும்.

தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலீத் மாணவ, மாணவிகளை சாதியின் பெயரால் அவமானப்படுத்துவது தொடர்கிறது.

 

ஆர்எஸ்எஸ் இறங்கி வேலை செய்கிறது.

முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தப்பின் ஆர்எஸ்எஸ் இறங்கி வேலை செய்கிறது. இவ்வாறு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

கல்வியை காவி மயமாக்க முயற்சி

மேலும் கல்வியை காவி மயமாக்க பாஜக முயற்சிப்பதாக அவர் கூறினார். அந்த நோக்கத்தில் தால் பாஜக அரசு செயல்படுகிறது என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

English summary
VCK Leader Tamilnadu government should involve in the Tamil Students death in JNU. BJP trying to convert the eduction as saffran.
Please Wait while comments are loading...