For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவை உடைத்த கையோடு திமுகவுக்கும் குறிவைக்கும் பாஜக! சிக்குவாரா கருணாநிதி குடும்ப உறுப்பினர்?

அதிமுகவைத் தொடர்ந்து திமுகவையும் உடைக்க பாஜக வியூகம் வகுப்பதால் அறிவாலயம் தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவைத் தொடர்ந்து திமுகவை உடைக்கும் வியூகங்களுடன் பாஜக களமிறங்கியுள்ளதாக வெளியான தகவல்களால் அண்ணா அறிவாலயம் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதலே தமிழகத்தில் காலூன்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி படாதபாடு பட்டு வருகிறது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் 'நந்திகளாக' இருப்பது அதிமுகவும் திமுகவும்தான்.

மற்ற மாநிலங்களில் காங்கிரஸ், மாநில கட்சிகள்தான் பாஜகவுக்கு பரம வைரிகளாக இருந்து வருகின்றன. இதனால் 'வலைவீசும்' படலத்தின் மூலம் எளிதாக கட்சிகளை உடைத்து ஆட்சிகளைக் கைப்பற்ற பாஜகவால் முடிகிறது.

கோவா, மணிப்பூரில்....

கோவா, மணிப்பூரில்....

அண்மையில் கோவாவிலும் மணிப்பூரிலும் குறைந்த இடங்களைப் பெற்ற போதும் உதிரி கட்சிகளின் ஆதரவுடன் எளிதாக ஆட்சிக் கட்டிலிம் அமர்ந்துவிட்டது பாஜக. இதே பாணியை தமிழகத்தில் பாஜகவால் அமல்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

திமுகவை உடைக்க முயற்சி

திமுகவை உடைக்க முயற்சி

கடந்த லோக்சபா தேர்தலின் போது திமுகவை உடைக்க ஒரு முயற்சியை பாஜக முன்னெடுத்தது. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வைத்தே இந்த முயற்சியை பாஜக முன்னெடுத்ததை நமது ஒன் இந்தியா தமிழ் முன்னரே பதிவும் செய்திருந்தது.

ஏமாற்றமடைந்த பாஜக

ஏமாற்றமடைந்த பாஜக

ஆனால் பாஜகவின் இந்த சதிக்கு உடன்பட முடியாது என திட்டவட்டமாக அவர் மறுத்துவிட்டார். இதனால் பாஜக கடும் ஏமாற்றமடைந்தது.

உடைந்தது அதிமுக

உடைந்தது அதிமுக

பின்னர் அதிமுகவுடன் நெருக்கம் பாராட்டி வந்த பாஜக, ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தனது சித்து வேலையை அரங்கேற்றியது. இதன் விளைவாக தற்போது அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு அதன் வலிமை மிக்க சக்தியான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிட்டது. இது பாஜகவுக்கு ஒருவகையில் நிம்மதி பெருமூச்சை கொடுத்துள்ளது.

அடுத்தது திமுக

அடுத்தது திமுக

தற்போது அதிமுகவைத் தொடர்ந்து திமுகவை உடைக்கும் வேலைகளில் பாஜக மும்முரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதும் கருணாநிதி குடும்பத்தின் உறுப்பினர் மூலம் இந்த 'திருப்பணி'யை செய்யும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறதாம் பாஜக.

இதுதான் ப்ளான்

இதுதான் ப்ளான்

அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் திமுகவையும் இரண்டாக பிளவுபடுத்திவிட்டால் இரு கழகங்களின் வாக்கு சதவீதங்களும் சரிவை சந்திக்கும்... இதை சூழலுக்கேற்ப பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் காலூன்றிவிடுவது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் பாஜக.

தலைமை மாற்றம்

தலைமை மாற்றம்

அதே நேரத்தில் இந்த வியூகங்களை செயல்படுத்துவதற்கான சரியான தலைமை தங்களிடம் தற்போது தமிழகத்தில் இல்லை என்பதும் பாஜக மேலிடத்தின் வருத்தமாம். உத்தரப்பிரதேச முதல்வராக சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்தது போல தமிழக பாஜக தலைவராக தடாலடி நபர் ஒருவரைப் போட்டு குட்டி கலாட்டாவில் இறங்கி குட்டையை குழப்பும் வேலையை முதலில் செய்வோம் என்பதுதான் பாஜகவின் உடனடி செயல்திட்டமாம். இதற்கடுத்தே திமுகவை நோக்கிய 'உடைத்தல்' பயணம் தொடங்கும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

English summary
DMK Sources accused that the BJP of trying to engineer a split in their party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X