13 பேர் கொத்தடிமைகளாகத் துயரம்...மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிய வட்டாட்சியர் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் தனியார் தேங்காய் நார் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக இருந்த 13 பேரை வட்டாட்சியர் மீட்டு சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தார்.

கரூர் மாவட்டம், கருப்பம்பாளையத்தில் தனியார் தேங்காய் நார் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் குறைந்த கூலிக்கு வேலைக்கு வரவில்லை என்பதால் பீகாரில் இருந்து வந்த 13 பேரை வேலைக்கு சேர்த்துள்ளனர்.

 Boned laborers of Bihar worked in karur rescued by Taluk officer

ஆனால், அவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனையடுத்து, அவர்கள் வட்டாட்சியரைச் சந்தித்து தாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வட்டாட்சியர் அவர்களை மீட்டு, பீகாருக்கு அனுப்பி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உணவகங்கள், தேயிலைத் தோட்டம், அழகு நிலையம் என பல இடங்களில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

North State Employees Recovered in Karur

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
In Karur, Karuppampalayam 13 people who belonged to Bihar worked as coolies without any salary. They were rescued and sent to Bihar.
Please Wait while comments are loading...