மணமேடையில் குத்தாட்டம் போட்ட மணப்பெண்.. பார்த்துக்கொண்டிருந்த மணமகன்-வீடியோ

மணப்பெண்ணுக்கே உண்டான நாணத்தை மறந்து மணமேடைக்கு அழைத்து வரும்போது நளினமாக நடனமாடி மணமகனையே ரசிக்க வைத்த பெண்ணின் விடியோ வைரலாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணங்கள் என்பது மிகப் பெரிய சடங்குகளாக பார்க்கப்பட்ட காலம்போய் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைக்கட்ட தொடங்கியுள்ளதை இந்த விடியோ வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்தியாவில் திருமணம் என்றாலே மணப்பெண்கள் குனிந்த தலை நிமிராமல் பெண்களுக்கே உண்டான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நற்பண்புகளை உள்ளடக்கியவர்களாகவே இருப்பர்.

திருமண பந்தம் என்பது ஒரு குடும்பத்தில் மகளாக, தங்கையாக, அக்காவாக இருந்த பெண்ணை மற்றொரு குடும்பத்தில் மனைவியாக, தாயாக, மருமகளாக, அண்ணியாக பல்வேறு உறவுமுறைகளுக்குள் செல்ல வழிவகுக்கிறது.

பெற்றோர் சொல்லே மந்திரம்

அந்த காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆணும், பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பெற்றோர் சொல்படி கேட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துவர்.

பெண் பார்க்கும் படலம்

அதன்பின்னர் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் பார்க்கும் படலங்கள் தொடர்ந்து மணமக்களின் விருப்பங்களுக்கேற்றார்போல் திருமணங்கள் நடைபெற்றன.

அதன்பின்னர் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் பார்க்கும் படலங்கள் தொடர்ந்து மணமக்களின் விருப்பங்களுக்கேற்றார்போல் திருமணங்கள் நடைபெற்றன.

காதல் திருமணங்கள்

இன்றைய காலகட்டங்களில் காதல் திருமணங்கள் அதிகரித்துவிட்டன. பெரும்பாலான பெற்றோர் ஜாதி,மதம், இனம், நாடு, மொழி ஆகியவற்றுக்கு அப்பால் மகன் அல்லது மகள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்கின்றனர்.

சடங்குகள்

இதில் இரு வீட்டாரின் சடங்குகளும், சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. என்னதான் நவீன யுகமாக இருந்தாலும் , தங்களுக்கு நன்கு பரிட்சயமானவராக இருந்தாலும் பெண் என்பவள் திருமணத்தின்போது அவளுக்கே உரிய நற்குணங்களை எந்த சூழலிலும் தாண்ட மாட்டாள்.

புதிய கலாசாரம்

மெஹந்தி சடங்குகள், பப்பே உணவு முறை, திருமணத்துக்கு முன்பே மணகோலத்தில் புகைப்படங்கள் எடுப்பது, மணமக்கள் முன்பு ஆடல், பாடல்கள் உள்ளிட்டவை வழக்கத்துக்கு மாறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மணப்பெண் ஆட்டம்

தற்போது மணமேடைக்கு வரும் பெண்கள் நாணத்தை மறந்து நளினமாக நடனமாடும் திருமணங்கள் நிறைய அரங்கேறுகின்றன. திருமணங்கள் என்பது உண்பது, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

வீடியோவில்..

மணமேடைக்கு அழைத்து செல்லப்படும் ஒரு பெண் தமிழ் பாட்டுக்கு நடனமாடுகிறார். மணமகன் உள்பட பெரியவர்கள் வரை இதை ரசிக்கின்றனர். இதை பார்க்கும் கனடாவில் நடைபெற்ற இலங்கை தமிழர்களின் திருமணம் போல் உள்ளது.

அங்க கேட்டாங்க

விடியோவை பார்க்கும்போது என்னை அங்க கேட்டாங்க, இங்க கேட்டாங்க, ஆனால் எல்லாதையும் வேணாணு சொல்லிட்டு உனக்கு (மணமகன்) ஓ.கே. சொல்லியிருக்கிறேன். என்னை நல்லபடியாக கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை சொல்லாமல் சொல்வது போல் உள்ளது.

English summary
A Bride of Indian culture dances her way to wedding stage. Her fiance also enjoys her dancing.
Please Wait while comments are loading...