For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய பெருங்கடலில் தமிழக, கேரளா மீனவர்கள் 102 பேரை கைது செய்தது இங்கிலாந்து கடற்படை!

By Mathi
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 102 மீனவர்களை இங்கிலாந்து கடற்படை கைது செய்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக இந்திய பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்திய பெருங்கடலில் இங்கிலாந்துக்கு சொந்தமாக டியாகோ கார்சியோ தீவு உள்ளது.

British navy detains 102 Indian fishermen near Diego Garcia

இந்தத் தீவை அமெரிக்கா குத்தகைக்கு எடுத்து கடற்படை தளம் அமைத்துள்ளது. இந்நிலையில் தமிழக, கேரளா மீனவர்கள் டியாகோ கார்சியோ தீவுப் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இங்கிலாந்து கடற்படை 102 மீனவர்களை கைது செய்துள்ளது.

அண்மைக்காலமாக தமிழக மீனவர்களை இங்கிலாந்து கடற்படை இப்பகுதியில் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களே ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fisheries officials have confirmed that 102 fishermen from Tamil Nadu and Kerala has been apprehended by the British navy near Diego Garcia Island in British Indian Ocean Territory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X