For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று மத்திய பட்ஜெட்: வரிமாற்றம் வருமா?- திரைத்துறையினர் எதிர்பார்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொதுபட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகுமோ என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில், திரைப்படங்களுக்காக செலுத்தப்படும் வரிகளில் மாற்றம் செய்யப்படுமா என திரைத்துறையினர் எதிர்ப்பார்த்துள்ளனர்.

2015-16ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளார். அனைவரையும் மகிழ வைக்கும் துறையான திரைத்துறையிலும் பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Budget 2015: Expectation by film industry

திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக இருந்தாலும் ஒரு திரைப்படம் வெளியிட வரிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு திரைப்படம் வெளியிடுவதற்க்கு திரைத்துறையினர் வரிகள் செலுத்தப்படுகின்றனர்.

படங்கள் எதுவாயினும் அதன் வெற்றி தோல்வியை பொருத்து வரிகள் அமைவதில்லை. எந்த விதமான படங்களாக இருந்தாலும் வரி செலுத்தும் கட்டாயத்திலேயே திரைத்துறையினர் உள்ளனர். வரி பட்டியலில் சேவை வரி மற்றும் விற்பனை வரி அடங்கியுள்ளது.

சரத்குமார்

வரி செலுத்துவது குறைத்து பொது பட்ஜெட்டில் திரைத்துறையினர் எதிர்பார்ப்பை பற்றி கூறுகிறார் நடிகர் சரத்குமார்.

லட்சங்களிலும், கோடி ரூபாய்களிலும் செலவழித்து தயாரிக்கப்படும் திரைப்படம் காணும் வெற்றியை பொருத்தே ஒரு திரைத்துறையில் உள்ளவர்களின் மகிழ்ச்சியும் துன்பமும் அடங்கியுள்ளது.

வெற்றியோ தோல்வியோ

படம் தோல்வி அடைந்தாலும் செலுத்தப்பட்ட வரியில் செலுத்துவதில் எந்த வித மாற்றமும் இருக்கப்போவதில்லை என்றே வருத்தம் தெரிவிக்கிறார் சரத்குமார்.

தயாரிப்பாளர் டி.சிவா

ஒரு கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ நிரந்தர வெற்றி பாதையில் இருப்பதில்லை. இப்படி ஏற்ற தாழ்வு அமைந்துள்ள இந்த துறையில் வரி செலுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றே தெரிவிக்கிறார் திரைத்துறை தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா.

தயாரிப்பாளருக்கே பாதிப்பு

பல தொழிலாளர்கள் பணிபுரியும் இத்துறையில் ஒரு படத்தின் லாபமும் நஷ்டமும் தயாரிப்பாளரையே பாதிக்கின்றது என்றும், பல உழைப்புகள் கடந்து ஒரு திரைப்படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிரமங்களை அடங்கியுள்ளது.

திரைத்துறையினருக்கு மாற்றம்

எனவே தாக்கல் ஆக இருக்கும் பொது பட்ஜெட்டில் வரி செலுத்துவதில் திரையுலகினருக்கு ஆதரவான மாற்றங்கள் வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர் திரைத்துறையினர்.

English summary
Budget 2015to be presented today Film industrialists expectation to be a change in taxes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X