தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக போக்குவரத்து அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தியாவின் முதன்மையான துறைமுகங்களில் ஒன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம். தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகமாவும் இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

CBI raids in tuticorin port

துறைமுகத்தில் இருந்து சரக்குகளை கையாளும் பணியில் தினம்தோறும் ஏராளமான கண்டெய்னர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கண்டெய்னர்களை கையாளுவதில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து துறைமுகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

ஏழு பேர் கொண்ட குழுவினர் துறைமுக போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். துறைமுக பொறுப்பு கழக போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரனின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. முன்னதாக இவரது வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

English summary
CBI Officers raid tuticorin voc port
Please Wait while comments are loading...

Videos