For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், சல்மான்கான்.. ஒட்டுமொத்த திரையுலகும் கலாமுக்கு இரங்கல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைவுக்கு இந்திய சினிமா நடிகர், நடிகைகள், கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், சல்மான்கான், ஷாருக்கான் முதல் பல்வேறு பிரபலங்களும் தங்களது அஞ்சலியை டிவிட்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹிந்தி நடிகர் கோவிந்தா: சர், ஏபிஜேஅப்துல் கலாம் நட்சத்திரம் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.

நடிகை ஸ்ரீதேவி: உலகமெங்கும் அறிவு தீபம் ஏற்றி வைத்த மக்களின் ஜனாதிபதி. ஆத்மா சாந்தியடையட்டும்.

ஓ காதல் கண்மணி புகழ் நடிகர் துல்கர் சல்மான்: எனது தலைமுறை கண்ட, அனேகமாக ஒரே சிறந்த தலைவர் கலாம். ஏவுகணைகளின் நாயகனே உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

கோஹ்லி காதலியும், ஹீரோயினுமான அனுஷ்கா ஷர்மா: அப்துல் கலாம் மறைந்த செய்தி கேட்டு பெரும் வருத்தமடைந்தேன். ஈர்க்கும் கனவுகள் மற்றும் ஒரு சிறந்த ஆத்மாவை இழந்துவிட்டோம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

பிரபுதேவா: நம் நாட்டில் அதிக மக்களால் விரும்பப்பட்ட ஒரு ஜனாதிபதி, சிறந்த ஆத்மா. அப்துல் கலாம் காண்பித்த பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.

ஆளவந்தான் திரைப்பட நாயகி ரவீனா தண்டன்: கலாமை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டதில் எனக்கு வருத்தம். அவரது அறிவாற்றல், நகைச்சுவை உணர்வுடன் கூடிய தத்துவங்கள், புத்திசாலித்தனம் போன்றவை எப்போதுமே இதயத்தில் நிறைந்திருக்கும்.

நடிகர் ஜான் ஆப்பிரஹாம்: எனது முன்னாள் குடியரசு தலைவர் கலாம் மறைந்துவிட்டார். இது ஒரு சோக தினம். இந்தியாவை ஒரு சூப்பர் பவர் நாடாக மாற்றிய மனிதர் அவர். நான் அவரை மிகவும் விரும்புகிறேன், மதிக்கிறேன்.

டாக்டர்.கலாம், நீங்கள் குடியரசு தலைவரானபோது, நம்பிக்கைக்கு புது அர்த்தத்தை இந்தியர்களுக்கு கொடுத்தீர்கள். ஒவ்வொரு இளைஞனையும், நாம் ஒரு சிறந்த தேசத்தில் வாழ்கிறோம், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்க வைத்த பெரிய தலைவரை இன்று இழந்துள்ளோம். படைத்தவன் உங்களை சொர்கத்திற்கு அழைத்துச் செல்வானாக.

நடிகர் ஷாருக்கான்: குர்தாஸ்பூர் தீவிரவாத தாக்குதலை கேள்வியுற்று கவலையடைந்திருந்த நேரத்தில், டாக்டர். கலாமின் மறைவு செய்தியும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லா அனைவருக்கும் சமாதானத்தை உண்டுக்குவாராக.

பாடகர் சங்கர் மகாதேவன்: இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் சோகமான நாளாகும். உத்வேகத்தை தூண்டும் ஒரு மனிதராக வாழ்ந்தார்.

யாரையாவது சந்திக்க உங்கள் மனது ஆசைப்பட்டால், காலதாமதம் செய்யாதீர்கள். ஏனெனில், நான் கலாம் 'சாப்பை' சந்திக்க ஆசைப்பட்டேன். நான் அந்த முயற்சியை தீவிரமாக எடுத்திருக்க வேண்டும். இப்போது எனக்குதான் இழப்பு.

English summary
Celebrities took to Twitter to pay their respects to the great scientist and his inspiring spirit Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X