அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்? எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும்?

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என தெரிகிறது..

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

வருமான வரித்துறை சோதனையில் குறிவைத்து வளைக்கப்பட்டவர் விஜயபாஸ்கர். சேகர் ரெட்டியுடன் கூட்டாளியாக இருந்தவர் விஜயபாஸ்கர்.

ராமமோகன் ராவ்

விஜயபாஸ்கர் வீட்டுக்கு போனால் ஏராளமான ஆவணங்கள் சிக்கும் என முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன்ராவ்தான் மத்திய அரசிடம் போட்டுக் கொடுத்தார் எனவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில்தான் விஜயபாஸ்கர் சிக்கினார்.

 

 

தினகரன் பிடிவாதம்

இருந்தபோதும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய கூடாது என்பதில் தினகரன் பிடிவாதமாக இருக்கிறார். இதனை மத்திய அரசு விரும்பவில்லை. தம்பிதுரை மூலமாக விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய நெருக்கடி கொடுத்து வருகிறது.

 

 

எடப்பாடியுடன் சந்திப்பு

இதனடிப்படையில்தான் தினகரனிடம் தம்பிதுரை பேசினார். ஆனால் தினகரன் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்தே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று இரு முறை சந்தித்து தம்பித்துரை விஜயபாஸ்கரை நீக்குமாறு வலியுறுத்தினார் என கூறப்படுகிறது.

 

 

எந்த நேரத்திலும் டிஸ்மிஸ்

இதனால் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் டிஸ்மிஸ் செய்யப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவே கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரும் சென்னையில் இருப்பதால் அமைச்சரவை மாற்றத்துக்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

English summary
Delhi sources said that Centre govt. want to drop Vijaya Baskar from the Edappadi Palanisamy Cabinet.
Please Wait while comments are loading...