For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெட்ரோ ரயில்ல ஏன்பா செந்தில் பாலாஜிய தேடறீங்க?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் தனது பயணத்தை துவக்கிவிட்டது. இதன் அழகைப் பார்த்து பிரமித்து போய்தான் இருக்கிறார்கள்.

இனி நம் சினிமா கவிஞர்கள் "மெட்ரோ ரயிலு... முன்னப் பாரு முன்னப்பாரு... மோனோ ரயிலு பின்னப்பாரு... பின்னப்பாரு..." என்று பாட்டெழுதுவார்கள்.

ஷங்கரின் ‘எந்திரன் 2' பைட் சீனில் ரஜினி மெட்ரோ ரயிலின் மீது ஏறி ஓடுவார்... பறந்து பறந்து பைட் பண்ணுவார். பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சினிமா சூட்டிங் எடுங்க யாரும் வெளிநாட்டுக்கு போகமாட்டார்கள் நம்ம மெட்ரோ ரயில்ல ஒரு பாட்டு சீன் வச்சுக்கலாம் என்று ஈசியாக முடிவெடுத்து விடுவார்கள்.

அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி மெரீனா பீச் பார்க்க வருவது போல தமிழக உள் மாவட்ட மக்கள் இனி மெட்ரோ ரயில் பார்க்க தலைநகர் சென்னைக்கு சுற்றுலா வருவார்கள். நேற்று முதல் சென்னையில் ஓடத் தொடங்கியுள்ள மெட்ரோ ரயிலைப் பற்றி டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் உற்சாக கமெண்டுகள் உலா வருகின்றன. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு கண்டனங்களையும் தெரிவிக்காமல் இல்லை டுவிட்டர்வாசிகள்.

செந்தில் பாலாஜி

டுவிட்டர்வாசிகளுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் ஏழாம் பொறுத்தம். சும்மா அடித்து ஆடுவார்கள். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அம்மாவின் விசுவாசிகளிடையே செந்தில் பாலாஜியை தேடுகிறார் ஒரு டுவிட்டர்வாசி

நம்ம டவுட்டு நமக்கு

புது வாகனத்தில் பயணத்தை துவக்கும் போது எலுமிச்சை வைப்பார்கள். அதே போல மெட்ரோ ரயிலுக்கும் வைத்தார்களா இல்லையா என்று கேட்கிறார் ஒருவர்.

இதென்ன கையேந்தி பவனா?

தரமான பொருள் வேண்டும் என்றால் கூடுதல் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும். தரை டிக்கெட்டில் 5 ரூபாய்க்கு சினிமா பார்த்தவர்கள் மல்ட்டி ப்ளெக்ஸ்சில் 120 ரூபாய் கொடுத்து பார்க்கத்தான் செய்கின்றனர். எனவே கட்டண குறைப்புக்கு வேண்டும் என்பவர்களுக்கு கமெண்ட் அடித்துள்ளார் இந்த வலைஞர்.

ஜப்பான் போனோம்ல

மெட்ரோ ரயில் எங்களால் வந்தது என்று காங்கிரஸ் கட்சியினர் சொல்ல... இல்லை இல்லை எங்களால் வந்தது திமுக மார்தட்டிக்கொள்ள, வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து பேரை தட்டி சென்றுவிட்டார் ஜெயலலிதா. மெட்ரோ ரயில் பற்றிய ஸ்டாலின் பேட்டிக்கு இந்த நக்கல் பதிவு.

டிக்கெட் முக்கியம் அமைச்சரே

நோ வித்தவுட்... நோ ஃபுட்போர்டு மெட்ரோ ரயிலின் சிறப்பம்சம். எனவே டிக்கெட் எடுத்தால் மட்டுமே கேட்டே திறக்கும் என்பதற்கான பதிவு இது.

குமாரசாமிக்கு ஒரு கும்பிடு

மெட்ரோ ரயில் ஓடுனதுக்கு எதுக்கு குமாரசாமிக்கு கும்பிடு போட்டாருன்னு தெரியலையே.

குடும்ப விழாவா?

கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் வலியுறுத்தியுள்ளனர்.

டம்மிதான் போங்க

மெட்ரோ ரயில் திட்ட தொடக்கவிழாவிற்கு மத்திய அமைச்சர்கள் யாரையும் அழைக்கவில்லை என்ற குரல் எழாமல் இல்லை. தமிழிசை சவுந்தரராஜன் பேட்டிக்கு பதிவிட்டுள்ளார் வலைஞர் ஒருவர்.

செல்ஃபி புள்ள

இனி மெட்ரோ ரயிலில் செல்போன் கொண்டு போனால்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வசூல் பண்றது மாதிரி 50 ரூபாய் வசூல் செய்தால் காசு அள்ளலாம் என்பது இவரது ஐடியா.

English summary
The first phase of the much awaited multi-crore Metro Rail chugged into the city on Monday, with Chief Minister J Jayalalithaa flagging off the inaugural service steered by a woman driver. Twitters searching Minister Senthil Balaji in Metro rail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X