For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று 106 டிகிரி வெயிலில் வாடிய சென்னை.. இன்று மேக மூட்டம்.. "அம்மாவுக்காகவா"?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று 105.98 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்றும் வீசியது. இருப்பினும் இன்று பரவாயில்ல என்று கூறும் அளவுக்கு வானம் சற்று மப்பும் மந்தாரமுமாக உள்ளது.

கோடையின் உச்சமான கத்திரி வெயில் காலம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.

ஆரம்பத்தில் சாந்தமாக இருந்த வெயில் தற்போது மீண்டும் தனது விஸ்வரூபத்தை காட்ட தொடங்கி உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்:

சுட்டெரிக்கும் வெயில்:

கோடை கத்திரி வெயில் முடிய இன்னும் 6 நாட்கள் உள்ளநிலையில் தமிழகம் முழுவதும் வெயில் தற்போது சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.

வெளுத்து வாங்கிய வெப்பம்:

வெளுத்து வாங்கிய வெப்பம்:

சென்னையில் நேற்று 105.98 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் வெளுத்து வாங்கியதால் நகரின் முக்கிய சாலைகளில் மதிய வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.

குளிர்பான கடைகளில் கூட்டம்:

குளிர்பான கடைகளில் கூட்டம்:

வெப்ப தாக்கம் காரணமாக சென்னையில் சாலையோர குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர்.

அவதியில் பொதுமக்கள்:

அவதியில் பொதுமக்கள்:

அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மின்சார ரயில், மாநகர பஸ்களில் பயணம் செய்த பயணிகள் வியர்வையால் நனைந்தனர். மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், நாய், பூனை போன்ற விலங்கினங்களும் அவதிபட்டனர்.

குளிர்ச்சியூட்டும் பொருட்கள்:

குளிர்ச்சியூட்டும் பொருட்கள்:

இளநீர், தர்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்கள் விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது. வரும் நாட்களிலும் வெயில் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவுக்காக வெயில் பதுங்குகிறதா

ஜெயலலிதாவுக்காக வெயில் பதுங்குகிறதா

7 மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் ஜெயலலிதா தனது வீட்டை விட்டு வெளியே வருகிறார். எனவே இன்று வெயில் சற்று தணிந்து காணப்படுகிறதோ?

English summary
Chennai people suffered a lot by the summer heat. Yesterday 105.98 degree heat registered in Chennai city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X