For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே 1 முதல் சென்னை உள் நாட்டு விமான நிலையம் ‘சைலண்ட்’ நிலையமாக மாற்றம்

மே 1 முதல் சென்னை உள் நாட்டு விமான நிலையத்தில், விமானம் ரத்து, தாமதம் மற்றும் நுழைவு வாயில் மாற்றம் குறித்த தகவல்களை பயணிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட மாட்டாது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வருகிற மே 1-ந் தேதி முதல் சென்னை உள் நாட்டு விமான நிலையம் 'சைலண்ட்' விமான நிலையமாக மாற்றப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய விமான நிலைங்களில் பயணிகளுக்கு ஒலி பெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிப்பதில்லை. மாறாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

Chennai's domestic airport terminal changed silent

அதை தொடர்ந்து சென்னை உள் நாட்டு விமான நிலையத்திலும் விமானம் ரத்து, தாமதம் மற்றும் நுழைவு வாயில் மாற்றம் குறித்த தகவல்களை பயணிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட மாட்டாது. மாறாக எஸ்.எம்.எஸ். மூலமே தகவல் தரப்படும்.

இந்த நடைமுறை வருகிற மே 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் முக்கியமான தருணங்களுக்கு மட்டும் ஒலிபெருக்கி மூலம் தகவல்கள் தரப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Chennai airport is ridding itself of boarding announcements in its domestic terminal from May 1 as it plans to emulate airports across the world by going ‘silent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X