For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் மழை பெய்யும்னு சொன்னாங்களே.. நல்லா வெயில் அடிக்குதே!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சென்னையில் கண்ணைக் கூசும் கனத்த வெயிலுடன் நிலவரம் சற்று கலவரமாகவே உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், "ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாரில் 20 மி.மீட்டரும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Chennai, suburbs to witness rain, thundershowers for next 24 hours

வெப்ப நிலையைப் பொருத்தமட்டில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, திருச்சி, சேலம், மதுரையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

மற்ற மாவட்டங்களைப் பொருத்தமட்டில் பெரும்பாலும் 88 முதல் 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் நிலவி உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே இன்று 75, 93 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை சென்னையில் எங்கும் மழை இல்லை. வரும் அறிகுறியையும் காணோம். ஒரு வேளை மாலையில் வரலாமோ...!

English summary
Chennai and its suburbs the weather office said that for the next 24 hours it would be cloudy. Rain or thundershowers may occur in some areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X