For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ட்விட்டர்' கோதாவில் குதித்த ப.சி.... "திருக்குறள்" மூலம் மோடி அரசு மீது கடும் தாக்கு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளமான ட்விட்டரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இணைந்திருக்கிறார். தமது ட்விட்டர் பக்கத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விமர்சித்திருக்கிறார் சிதம்பரம்.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் ட்விட்டரையே ஆயுதமாக்கிக் கொண்டு அதிரடியாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமும் களமிறங்கியுள்ளார்.

இன்று @PChidambaram_IN என்ற முகவரியில் ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார் சிதம்பரம். இன்று காலை முதலே ப.சிதம்பரம் தொடர்ந்து பல பதிவுகளை போட்டு வருகிறார்.

முதல் ட்வீட்டாக, "ஹலோ... நான் ட்விட்டரில் இணைந்துவிட்டேன். சமகால பிரச்சினைகள் குறித்து சில முக்கிய விவகாரங்களை எழுப்புவதற்காக இணைந்துள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது ட்விட்டர் பக்கத்தை முதல் 3 மணி நேரத்தில் சுமார் 5,000 பேர் பேர் ஃபாலோ செய்துள்ளனர்.

மேலும், 448வது திருக்குறளை சுட்டிக்காட்டி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்" ஆங்கிலத்தில் சுட்டிக்காட்டி பதிவு செய்திருந்தார்.

மத்தியில் மோடி ஆட்சி ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில், கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்' என்ற குறளை சிதம்பரம் பதிவு செய்து கோதாவில் குதித்திருக்கிறார்...

English summary
Former Union Finance Minister P Chidambaram has joined the popular micro blogging site Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X