For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இந்திய நிர்வாக காஷ்மீர்' என்கிற யுஎஸ் அறிக்கையை மத்திய அரசு எப்படி ஏற்கலாம்? ப.சிதம்பரம் கேள்வி

இந்திய நிர்வாக காஷ்மீர் என குறிப்பிடும் அமெரிக்காவின் அறிக்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய நிர்வாக காஷ்மீர் என குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் அறிக்கையை மத்திய அரசு எப்படி ஏற்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருந்தோர். இந்த நிலையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் சலாவுதீனை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனம் செய்தது.

Chidambaram slams Centre for not objecting to US calling Indian-administered JK

இது இந்தியாவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பெருமிதத்துடன் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனம் செய்யும் அமெரிக்காவின் அறிக்கையில், 'இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறப்படும் நிலையில் இந்தியா நிர்வகிக்கும் பகுதி என அமெரிக்கா குறிபிட்டுள்ளதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமெரிக்காவின் இந்த அறிக்கையை எப்படி மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் மத்திய அரசு ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
Former Union Minsiter Chidambaram criticised the Centre for not objecting to the phrase Indian-administered Jammu and Kashmir used by the US government in its order designating Hizbul Mujahideen leader Syed Salahuddin a global terrorist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X