For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய நெடுஞ்சாலைகளை மாற்ற முடியாததுதான்.... தவறான சுற்றறிக்கை அனுப்பிட்டோம் யுவர் ஆனர்!

நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற உத்தரவிட்ட சுற்றறிக்கையில் தவறு நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : நெடுஞ்சாலைகளை மாற்ற உத்தரவிட்ட சுற்றறிக்கையில் தவறு நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிட்டே நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வரப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளரும் எம்பியுமான ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

circular about transforming highways into local body administration is wrong : govt pleader said in Chennai HC

மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆ4ரான வழக்கறிஞர் சுற்றறிக்கையில் தேசிய நெடுஞ்சாலைகளை மாற்ற முடிவு என தவறாக தகவல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புடன் இணைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று கூறிய அவர், மாநில நெடுஞ்சாலைகள் தான் மாற்றப்பட உள்ளதாகக் கூறினார்.

மேலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் பிரிக்கப்படுவதற்கு முன்னர் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் தான் அவை பராமரிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

English summary
Tn government has no rights to convert NH into local bodies, mistake done in a circular : tn govt said in HC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X