For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டப்பேரவையில் பன்னீர் செல்வம் எங்கே அமர்வார்?: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் எனச் சொன்னால், முதல்வர் பன்னீர்செல்வம் பதற்றமடைவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பன்னீர் செல்வம் எங்கே அமர்வார் என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகள் பல எழுந்துள்ளன. அவசர முக்கியத் துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை களைப் பற்றி விவாதிப்பதற்காக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று நான் மட்டுமல்ல, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பேரவையைக் கூட்டு என்றால் முதல்வர் பன்னீர்செல்வம் பெரிதும் பதற்றமடைகிறார். ஒருவேளை பேரவையைக் கூட்டினால், தான் எங்கே அமர்வது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந் திருந்த இடத்திலேயே அமர முடியுமா?

இடவசதி செய்வாரா?

இடவசதி செய்வாரா?

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, நான் சட்டப்பேரவைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே இடவசதி செய்து தரவில்லை. முதல்வர் பன்னீர்செல்வமாவது எனக்கு உரிய இடவசதி செய்து கொடுப்பாரா?

கண்ணியம் காப்பார்களா?

கண்ணியம் காப்பார்களா?

திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருந்து ஜெயலலிதா படித்த உரையைக் கேட்டார்கள். அப்போது திமுக உறுப்பினர்கள் கடைபிடித்த கண்ணியத்தைப் போல, இப்போது அதிமுக உறுப்பினர்கள் நிச்சயம் கடை பிடிப்பார்கள் என்று உறுதி செய்துகொண்டு, பன்னீர்செல்வம் அறிவிப்பாரானால், சட்டப் பேரவைக்கு செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன்.

வசைபாடும் மாநகராட்சி கூட்டம்

வசைபாடும் மாநகராட்சி கூட்டம்

திமுகவை வசைபாடவே சென்னை மாநகராட்சி மன்றத்தைக் கூட்டுகின்றனர். சென்றமுறை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடந்தபோதும், சுமார் ஒன்றரை மணி நேரம் என்னையும், மு.க.ஸ்டாலினையும் மேயர் சைதை துரைசாமி வசை பாடினார். மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எடுத்துச் சொல்லித் தீர்வு காண்பதற்கான வாய்ப்பையும் மறுத்து வருகிறார்.

ராஜினாமா செய்தி

ராஜினாமா செய்தி

மாநகராட்சி மேயர் துரைசாமி மீது பல்வேறு புகார்கள் சென்றதால், அ.தி.மு.க., நிகழ்ச்சிகளில், அவர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போஸ்டர்கள் மற்றும் நோட்டீஸ்களில், அவரது பெயரை போடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்து விட்டதாகவும் செய்தி பரவியது.

விளக்கம் அளிப்பாரா?

விளக்கம் அளிப்பாரா?

இதையடுத்து, 'நீங்கள் ராஜினாமா செய்து விட்டீர்களா' என, நிருபர்கள் கேட்ட போது, 'செத்தவனிடமே செத்து விட்டீர்களா என கேட்கிறீர்களே' என, பதிலளித்திருக்கிறார்.இந்த செய்திகள் தொடர்பாக, மேலும் தகவல்கள், சென்னை மாநகர மக்களிடம் பரவாமல் இருக்க, சைதை துரைசாமி, என்னையும், தி.மு.க.,வையும், ஸ்டாலினையும், மா.சுப்பிரமணியத்தையும் நினைத்து, 'தை, தை' என, ஆட்டம் போடாமல் உரிய விளக்கத்தை அளிக்க முன் வர வேண்டும்.

வயது வரம்பு நிர்ணயம்

வயது வரம்பு நிர்ணயம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தற்போது நிர்ணயம் செய்துள்ள வயது வரம்பினை யும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை யையும் குறைத்தால், அதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களே.

கிராமப்புற மாணவர்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவர். எனவே, இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் போக்கி, தற்போதுள்ள வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பைச் செய்ய வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi alleged on Sunday that Chief Minister O. Panneerselvam was afraid of convening the Assembly to discuss the vital issues of the State and said he was ready to attend the session if arrangements were made for him to enter the House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X