For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்களுக்குத் தூக்கு: மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

CM OPS urges PM modo to save TN fishermen in Lanka
சென்னை:இலங்கையில் 5 தமிழக மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

2011ஆம் ஆண்டு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படை அவர்கள் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்தது.

இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது அநீதியானது; கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் போதைப் பொருள் கடத்தினார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். 5 மீனவர்களையும் மீட்பதற்கு தேவையான உயர் சட்ட உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary
TN CM Pannerselvam writes to PM Modi to save fishermen who are sentenced to death in SriLanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X