பேக்கரி விபத்து: தீயணைப்பு வீரர் ஏகராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- எடப்பாடியார் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடுங்கையூர் பேக்கரி கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், தீயை அணைக்க முயன்று இறந்த தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதல்வர் நிவாரண உதவியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார். 47 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 CM Palanisamy announced Govt job to Firefighter Yagarajan Family member

அவர்களை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். அவருடன் வந்திருந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் எம்.எல்.ஏ., வெற்றிவேல் ஆகியோரும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

'காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும்' என முதல்வர் பழனிச்சாமி மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்றும் மருத்துவர்களிடம் கேட்டு, உயரிய சிகிச்சையளிக்க வலியுறுத்தினார்.

பின்னர் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " கடை ஷட்டரை திறந்த போது சிலிண்டர்கள் வெடித்தன. இதனால் தான் அங்கிருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்களுக்கு போதுமான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல். இந்த விபத்தில் உயிரிழந்த ஏகராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். காயம் அடைந்த அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் " என்றார்.

தீவிபத்தில் காயமடைந்த 29 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 12 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சென்னை கொடுங்கையூர் தீவிபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். 'அவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக' ராதாகிருஷ்ணன் பேட்டியில் கூறியிருந்தார்.

CM Edappadi Palanisamy Heads Ministers Meeting In Secretariat | Oneindia Tamil

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
CM Palanisamy announced Govt job to Firefighter Yagarajan Family member. He console to the victims of Chennai bakery fire accident at Kilpauk Hospital Today.
Please Wait while comments are loading...